under review

தமிழ்த் தாய் விருது

From Tamil Wiki
Revision as of 15:36, 12 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று தமிழ்த் தாய் விருது. 2012-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.

தமிழ்த் தாய் விருது

அயலகத் தமிழர்கள், அயல் மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கிச் செயலாற்றும் தமிழ் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவ்விருதினை வழங்குகிறது. ஐந்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் கொண்டது இவ்விருது.

தமிழ்த் தாய் விருது பெற்ற தமிழ் அமைப்புகள் - 2021 வரை

எண் ஆண்டு இலக்கிய அமைப்பு
1 2012 மதுரைத் தமிழ்ச் சங்கம்
2 2013 தில்லித் தமிழ்ச் சங்கம்
3 2014 நவி மும்பைத் தமிழ்ச் சங்கம்
4 2015 திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்
5 2016 மாணவர் மன்றம் தமிழ் அமைப்பு
6 2017 பெங்களூர் தமிழ்ச் சங்கம்
7 2018 புவனேசுவர் தமிழ்ச் சங்கம்
8 2019 சிகாகோ தமிழ்ச் சங்கம்
9 2020 வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கம் சென்னை
10 2021 மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Apr-2023, 19:06:18 IST