under review

வி. கந்தப்பிள்ளை

From Tamil Wiki

வி. கந்தப்பிள்ளை (1840 - 1913) ஈழத்து தமிழ்ப்புலவர். சைவப்புலவர், ஆசிரியர், சொற்பொழிவாளர், புராண உரையாளர், பதிப்பாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

வி. கந்தப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம், வேலணையில் வினாசித்தம்பிக்கு மகனாக 1840-ல் பிறந்தார். ஆறுமுகநாவலரின் நெருங்கிய நண்பர். வித்துவ சிரோண்மணி பொன்னம்பலபிள்ளையின் மாணவர். தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆறுமுகநாவலரிடம் கற்றார். சித்தாந்த சாஸ்த்திரங்களை இணுவில் நடராசையரிடம் முறையே கற்றார்.

ஆன்மிகம்

சைவசித்தாந்தம் பற்றிய விரிவுரைகள் செய்வதார். யாழ்ப்பாணம், கொழும்பு, சிதம்பரம் ஆகிய இடங்களில் சைவ சமயத்தின் சிறப்புக்களை விரிவுரைகள் பல நிகழ்த்தினார். சைவ நெறியின் விழுப்பத்தைப் பற்றிய கட்டுரைகள் பலவற்றை அடிக்கடி பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டிருந்தார். கொழும்புச் சைவபரிபாலன சபையில் பல ஆண்டுகளாக சைவசமயம் பற்றிய விரிவுரைகளை நிகழ்த்தினார்.

ஆசிரியப்பணி

வி. கந்தப்பிள்ளை தீவுப்பகுதியில் தமிழையும் சைவத்தையும் வளர்க்கப் பணியாற்றினார். 1880-ல் வேலணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். நெடுந்தீவிலும் பாடசாலையை நிறுவும் நோக்கில் ஆ.சோமசுந்தரம்பிள்ளையை அங்கு அனுப்பி திண்ணைப்பள்ளியை நடத்தினார்.

நாவலரவர்கள் கட்டளைப்படி தமது ஊரிலே தமிழ் வித்தியா சாலை ஒன் றினைத் தாபித்து, அதிபராயிருந்து, அதனைச் சிறந்த முறையில் நடாத்தி வந்தவர்.

மாணவர்கள்
  • பேரம்பலப் புலவர்
  • ஆசிரியர் நமசிவாயம்
  • ஆசிரியர் தம்பு

இலக்கிய வாழ்க்கை

தமிழ் இலக்கண இலக்கியங்கள், சைவ சித்தாந்த சாத்திரங்களில் புலமையுடையவர். வேலணையிலுள்ள மகாகணபதிப் பிள்ளையார்மீது திருவூஞ்சல் முதலியனவும், தனிக் கவிகள் பலவும் பாடியவர்.

பதிப்பாளர்

இவர், தமது ஊரிலே ஓர் அச்சகத்தினை நிறுவி, "சைவ சூக்குமார்த்த போதினி” என்னும் பெயருடன் ஒரு பத்திரிகையை மாதந்தோறும் வெளியிட்டு வந்தார். தத்துவப்பிராகாசம் என்ற நூலை அச்சில் பதிப்பித்தார். பல தமிழ், சைவ நூல்களைப் பதிப்பித்தார். சைவ தத்துவங்களை விளக்கும் ‘சைவ சூக்மார்த்த போதினி’ என்ற சித்தாந்த சஞ்சிகையை வேலணையில் அச்சிட்டார்.

"தத்துவப் பிரகாசம்” என்னும் சித்தாந்த நூலினை உரையுடன் ஆராய்ந்து பதிப்பித்தவர். 

மறைவு

இவர் 1913ஆம் ஆண் டிலே இவ்வுலக வாழ்வினை நீத்தார்.

நூல் பட்டியல்

  • சைவ சூக்மார்த்த போதினி

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.