under review

ஏ. ராயர்

From Tamil Wiki
Revision as of 12:58, 4 September 2026 by Boobathi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஏ. ராயர்

ஏ. ராயர் (பிறப்பு: 1950) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார் (ஆசான்). அதிகமும் பெண் வேடங்கள் ஆடுபவர். தெற்கத்தி பாணி கூத்துக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஏ. ராயர் சென்னை குரோம்பேட்டையிலுள்ள சங்கர் நகரில் 1950-ல் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை பயின்றார்.

கலை வாழ்க்கை

ஏ. ராயர் வேலு கவுண்டரிடம் கூத்து பயின்றார். மேல்வலக்கூர் பசுமலை முருகர் நாடக சபா, கீழ்பெண்ணாத்தூர் ஓம் சக்தி நாடக மன்றம் ஆகியவற்றில் கூத்து நடத்தினார். அதிகமும் பெண் வேடங்கள் ஏற்று ஆடினார். திரெளபதி, பொன்னுருவி, சூரவேடம், கிருஷ்ணன், ஈஸ்வரன், அர்ஜுனன் ஆகிய பாத்திரங்களில் நடித்தார்.

மாணவர்கள்

ஏ. ராயர் பதினேழுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கூத்து கற்றுக் கொடுத்தார். வில் வளைப்பு, திரெளபதி துகில் உரித்தல், கிருஷ்ணன் ஜலக்கிரிடை, 18-ஆம் நாள் போர் ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். முக்கியமான மாணவர்கள்:

  • சின்ன அகரத்திலுள்ள நீலகண்டன்
  • பத்திரிப்பேட்டை குப்பன்

பங்கேற்ற கூத்துகள்

  • மகாபாரதம்
  • திரெளபதி துகில்
  • கிருஷ்ணன் ஜலக்கிரிடை
  • 18-ஆம் நாள் போர்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 09:38:51 IST