நா. ஏகாம்பரம்

From Tamil Wiki

நா. ஏகாம்பரம் (மார்ச் 23, 1844 - அக்டோபர் 27, 1877) (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

நா. ஏகாம்பரம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வல்லுலெட்டித்துறையில் மார்ச் 23, 1844-ல் பிறந்தார். தமது ஊரிலுள்ள பாடசாலையில் கல்வி பயின்றார். வட்டுக்கோட்டையிலுள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலக் கல்வி பயின்றார். இந்தியாவுக்குச் சென்று, பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலம் பயில்வதை நிறுத்தி விட்டு, தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையே பயில்வதில் ஆர்வம் காட்டினர்.

இலக்கிய வாழ்க்கை

மீனுட்சி சுந்தரம்பிள்ளை, இராஜகோபாலபிள்ளை, இராமலிங்கம்பிள்ளை ஆகியோரிடம் சில காலம்வரை தமிழிலக்கியங்களைப் பயின்றார். இந்தியாவிலிருந்த போது அட்டவதானப் பயிற்சி பயின்றார். இலங்கையில் முதன்முதலாக அட்டாவதானம் செய்தவர் இவர். வெண்பாவும் பாடியுள்ளார்.

மறைவு

நா. ஏகாம்பரம் அக்டோபர் 27, 1877-ல் காலமானார்.

நூல் பட்டியல்

உசாத்துணை

[1]