under review

உவில்லியம்பிள்ளை

From Tamil Wiki

உவில்லியம்பிள்ளை (1891-1961) ஈழத்து எழுத்தாளர், நாவலாசிரியர், நாடகக் கலைஞர். மட்டக்களப்பின் முதலாவது நாவலாசிரியராக நம்பப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

உவில்லியம்பிள்ளை மட்டக்களப்பினைச் சார்ந்த தம்பிலுவில் என்னும் ஊரில் 1891-ல் பிறந்தார். இயற்பெயர் மூத்ததம்பி.

நாடக வாழ்க்கை

உவில்லியம்பிள்ளை நாட்டுக்கூத்து நாடகக் கலைஞர். கண்டிராசன் கூத்து, நச்சுப்பொய்கை ஆகியவை புகழ்பெற்ற நாடகங்கள்.

இலக்கிய வாழ்க்கை

பண்டிதர் வீ.சீ.கந்தையா, தன் ‘மட்டக்களப்புத் தமிழகம்‘ நூலில் மட்டக்களப்பின் முதலாவது நாவலாசிரியர் என்று தம்பிலுவில் உவில்லியம்பிள்ளையை சுட்டிக்காட்டுகின்றார். இந்திராபுரி இரகசியங்கள், மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம் ஆகிய இரு நாவல்கள் அச்சில் வரவில்லை. உவில்லியம்பிள்ளை என்று பெரும்புலவர் பரம்பரை ஒன்று, இவ்வூரில் உருவாகக் காரணமானது. நாடக இலக்கியங்கள் பல எழுதினார்.

மறைவு

உவில்லியம்பிள்ளை 1961-ல் காலமானார்.

நூல் பட்டியல்

நாடக
  • கண்டிராசன் சரிதை
  • பவளேந்திரன் நாடகம்
  • புவனேந்திரன் விலாசம்
  • நச்சுப் பொய்கைச் சருக்கம்
  • சுந்தர விலாசம்
  • மதுரைவிரன்
நாவல்
  • இந்திராபுரி இரகசியங்கள்
  • மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.