சிவ. சங்கரபண்டிதர்

From Tamil Wiki
Revision as of 10:03, 3 October 2022 by Ramya (talk | contribs)

சிவ. சங்கரபண்டிதர் (சி. சங்கரபண்டிதர்)(1821 - 1891) ஈழத்து தமிழ் அறிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவ. சங்கரபண்டிதர் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் சிவகுருநாதர், தெய்வானையம்மாள் இணையருக்கு மகனாக 1821-ல் பிறந்தார். யாழ்ப்பாணத்து கந்தரோடையைச் சேர்ந்த வித்துவ சிரோமணி சேனாதிராய முதலியாரின் மாணவரான அப்பாபிள்ளையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். வேதாரண்யம் சுவாமிநாத தேசிகரிடத்தில் சமஸ்கிருத வியாகரணம், தருக்கம், காவியம் முதலியவற்றைக் கற்றார். நீர்வேலியில் வாந்ததால் னீர்வேலிச் சிவசங்கரபண்டிதர் என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சிவ. சங்கரபண்டிதர் சைவப்பிரகாசனம், சத்த சங்கிரகம், அகநிர்ணயத் தமிழுரை, சிவபூசையந்தாதி உரை, கிறிஸ்துமதகண்டனம், சிவ தூஷண கண்டனம், அனுட்டான விதி போன்றன இயற்றிய நூல்களாகும்.

மறைவு

சிவ. சங்கரபண்டிதர் 1891-ல் காலமானார்

நூல் பட்டியல்

  • சைவப்பிரகாசனம்
  • சத்த சங்கிரகம்
  • அகநிர்ணயத் தமிழுரை
  • சிவபூசையந்தாதி உரை
  • கிறிஸ்துமதகண்டனம்
  • சிவ தூஷண கண்டனம்
  • அனுட்டான விதி

உசாத்துணை