being created

கா. திரவியம்

From Tamil Wiki
Revision as of 17:10, 2 May 2026 by Ramya (talk | contribs)

கா. திரவியம் (மே 11, 1925 - பிப்ரவரி 11, 1999) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ராதாகிருஷ்ணன், ஹென்ரிக் இப்சென் ஆகியோரின் நூல்களை மொழியாக்கம் செய்ததற்காக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

கா. திரவியம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் பிறந்தார். ஒரு இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரி. தமிழக அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் செயலராகப் பணியாற்றியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

கா. திரவியம் ராதாகிருஷ்ணன் பேருரைகளைத் (தொகுதிகள் 1-3) தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவரின் ’தேசியம் வளர்த்த தமிழ்’, ‘சுதந்திரப் போராட்டம்’, ’சிந்தனைச் சுரங்கம்’, 'அன்டிகனியும் நந்தவனத்துச் சித்திரக்குள்ளனும்’ ஆகிய நூல்களையும் மொழியாக்கம் செய்தார். 'மாணவர் இயக்கம்’ நூலின் ஆசிரியர். பழனியப்பா பிரதர்ஸ் மற்றும் பூம்புகார் பதிப்பகம் போன்றவை இவருடைய படைப்புகளை வெளியிட்டுள்ளன.

நார்வே மொழிப் படைப்புகளுள் ஹென்ரிக் இப்சென்-இன் சமூகத்தின் தூண்கள், மக்களின் பகைவன் ஆகிய இரு நாடகங்களை மொழியாக்கம் செய்தார். தோல்வியின் சந்நிதானத்திலே, கோபுரத்தின் உச்சியிலே எனும் வேறு நாடக நூல்கள் கா. திரவியம் மொழிபெயர்ப்பில் வெளிவந்தன.

நூல் பட்டியல்

  • மாணவர் இயக்கம்
  • மரகதக் கண்ணன்
மொழியாக்கம்
  • ராதாகிருஷ்ணன் பேருரைகளைத் (தொகுதிகள் 1-3)
  • தேசியம் வளர்த்த தமிழ்
  • சுதந்திரப் போராட்டம்
  • சிந்தனைச் சுரங்கம்
  • அன்டிகனியும் நந்தவனத்துச் சித்திரக்குள்ளனும்
  • சமூகத்தின் தூண்கள்
  • மக்களின் பகைவன்
  • தோல்வியின் சந்நிதானத்திலே
  • கோபுரத்தின் உச்சியிலே

உசாத்துணை

  • தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள் - முனைவர் மு.வளர்மதி - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.