under review

அஷ்ரப் முஹம்மது ஹுசைன்

From Tamil Wiki
Revision as of 03:44, 25 April 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அஷ்ரப் முஹம்மது ஹுசைன்

அஷ்ரப் முஹம்மது ஹுசைன் (மு.ஹு.மு. அஷ்ரப்) (அக்டோபர் 23, 1948 - செப்டம்பர் 16, 2002) ஈழத்து தமிழ் எழுத்தாளர், கவிஞர், வழக்கறிஞர், இலங்கை முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அஷ்ரப் முஹம்மது ஹுசைன் இலங்கை நாட்டின் கல்முனை, சம்மாந்துறையில் அக்டோபர் 23, 1948-ல் பிறந்தார். தந்தை முஹம்மது ஹுசைன். தாய் மதீனா உம்மா. கல்முனைக்குடி அல்-அஷ்கர் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்றார். இடைநிலைக் கல்வியை கல்முனை பாத்திமா கல்லூரியிலும், கல்முனை உவெஸ்லி கல்லூரியிலும் தொடர்ந்தார். கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

அரசியல் வாழ்க்கை

அஷ்ரப் முஹம்மது ஹுசைன் இலங்கை முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவர். இலங்கை பாராளுமன்றத்தின் அங்கத்தவராகவும் துறைமுகங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தார். இவரது இறப்பிற்குப் பின் இவரின் மனைவி இப்பொழுது அரசியலில் ஈடுபட்டார்.

இலக்கிய வாழ்க்கை

அஷ்ரப் முஹம்மது ஹுசைனின் முதல் கவிதை 'தாய்' தேசியமுரசு பத்திரிகையில் 1962-ல் வெளியானது.

சிறுவர் கவிதைகள், இஸ்லாமிய சமூகக் கவிதைகள், பொதுக் கவிதைகள், நவீன கவிதைகள், சமூக எழுச்சிக் கவிதைகள் என்ற வகைமைகளில் கவிதைகள் எழுதினார். இவரது கவிதைகள் தினபதி, புதுப்பாதை, விவேகி, தினகரன், தமிழ் முரசு, புயல், புதுமைக்குரல் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தன. "நான் எனும் நீ" என்ற தலைப்பில் இவரின் மொத்த கவிதைத்தொகுப்பு வெளிவந்தது. ஆங்கிலத்தில் A Ride to the Beach என்னும் தலைப்பில் இவர் எழுதிய கவிதை Scholar என்னும் மாணவர் பத்திரிகையில் வெளியானது.

மறைவு

அஷ்ரப் முஹம்மது ஹுசைன் செப்டம்பர் 16, 2002-ல் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • நான் எனும் நீ (முழுத்தொகுப்பு)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Apr-2026, 17:48:54 IST