under review

அஸீஸ் அப்துல் றசீது

From Tamil Wiki
Revision as of 17:51, 24 April 2026 by Logamadevi (talk | contribs)

அஸீஸ் அப்துல் றசீது (பிறப்பு: டிசம்பர் 20, 1948) ஈழத்து எழுத்தாளர். கலைஞர். நாடக ஆசிரியர், நடிகர்.

வாழ்க்கைக் குறிப்பு

அஸீஸ் அப்துல் றசீது இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையில் டிசம்பர் 20, 1948-ல் பிறந்தார். தந்தை அப்துல் றசீது. திருகோணமலை குட்டிக்கார அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, திருகோணமலை கிண்ணியா முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். கிண்ணியா புஹாரி அரபிக் கல்லூரியில் மௌலவிப் பட்டம் பெற்றுள்ளார்.

பொறுப்புகள்

அஸீஸ் அப்துல் றசீது கிண்ணியா உப வலயக்கல்வி அலுவலகத்தில் அரபு-இஸ்லாம் ஆசிரிய ஆலோசகராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அஸீஸ் அப்துல் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். இவரின் முதல் ஆக்கம் 1984-ல் தினபதி பத்திரிகையில் 'இஸ்லாமிய பூங்காவில், சமூக ஒற்றுமைக்கு பாக்கியவான்களின் பணி' என்னும் தலைப்பில் இடம்பெற்றது. இவரின் ஆக்கங்கள் தினகரன், நேயம், தினபதி போன்ற பத்திரிக்கைகள், இதழ்களில் வெளிவந்துள்ளன.

உசாத்துணை

‎


✅Finalised Page