under review

கைவல்ய நவநீதம்

From Tamil Wiki
Revision as of 12:11, 31 March 2026 by SakthivelS (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Kaivalya Navaneetham. ‎

கைவல்ய நவநீதம்

கைவல்ய நவநீதம் வேதாந்த தத்துவ நூல். அத்வைத நூல்களில் முதன்மையானது. தாண்டவராய சுவாமிகளால் எழுதப்பட்டது. கைவல்ய நவநீதம் ரமண மகரிஷியால் சாதகர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

ஆசிரியர்

கைவல்ய நவநீதத்தை எழுதியவர் தாண்டவமூர்த்தி எனப்படும் தாண்டவராய சுவாமிகள். இவர் நன்னிலம் நாராயண தேசிகரின் மாணவர்.

நூல் அமைப்பு

அத்வைத நூல்களில் முதன்மையானது கைவல்ய நவநீதம். ஆசிரியர் மாணவருக்கு இடையே நிகழும் உரையாடல் போல நூல் அமைந்துள்ளது. இந்நூலில்

  • பாயிரங்கள் (7 செய்யுள்கள்)
  • தத்துவ விளக்கப்படலம் (101 செய்யுள்கள்),
  • சந்தேகம் தெளிதற் படலம் ( (185 செய்யுள்கள்)

ஆக மொத்தம் இருநூற்று தொண்ணூற்று மூன்று(293) செய்யுள்கள் உள்ளன. இவற்றில்

  • எழுசீர் ஆசிரியவிருத்தம் பத்து பாடல்கள் (231-240),
  • எண்சீர் ஆசிரியவிருத்தம் பதினொன்று பாடல்கள் (123-133),
  • அறுசீர் ஆசிரியவிருத்தம் 172 பாடல்கள்
பகுதிகள்
  • தத்துவ விளக்கப்படலம் - 148 பிரசங்கத்தொகை
  • சந்தேகம் தெளிதற் படலம் - 161 பிரசங்கத்தொகை

மொழியாக்கம்

1855-ல் டாக்டர் கார்ல்க்ரோல் என்ற ஜெர்மானியரால் ஜெர்மனியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.

உரைகள்

  • அருணாசல சுவாமிகள்
  • ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள்
  • சிதம்பரம் பொன்னம்பல ஞானதேசிகர்
  • கோ. வடிவேலு செட்டியார்
  • திருமாநிலையூர் கோவிந்தய்யர்
  • ஆங்கில உரை: ரமணானந்த சரஸ்வதிகள்

நூலின் வழி அறியவரும் செய்திகள்

  • தத்துவ விளக்கப்படலத்தில் ஏகநாயகன் என்பதற்குப் பொருள், உபலட்சணம், சாதன சதுஷ்டயம், பிரம்மத்தின் இயல்பு, ஜீவன் இயல்பு ஆகியவை விளக்கப்பட்டன.
  • சந்தேகம் தெளிதல் படலத்தில் சமுசய பேதம், மலின வாசனை, உலக வாசனை, இருவகை மனநாசம், திடஞானம் - அதிடஞானம் போன்ற பகுதிகள் விளக்கப்பட்டன.

பாடல் நடை

ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம்,
ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும்,
பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும்,
தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே!

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Nov-2023, 12:58:07 IST