under review

பாத்திமா முகம்மத்

From Tamil Wiki
Revision as of 11:24, 19 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected year suffix text;)

பாத்திமா முகம்மத் (காத்தான்குடி பாத்திமா) (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் கவிஞர், எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். பெண்களின் பிரச்சனைகளை முதன்மையாகக் கொண்ட படைப்புகள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

பாத்திமா முகம்மத் இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியில் பிறந்தார். காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில்ல் கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

பாத்திமாவின் கணவர் முகம்மத் ஓயு்வு பெற்ற அதிபர். இவரின் ஒரே மகன் வைத்தியராக உள்ளார். பாத்திமா அரச முகாமைத்துவ உதவியாளராக முப்பது வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

காத்தான்குடி பாத்திமா என்ற பெயரில் கவிதை, சிறுகதைகள் எழுதினார். பாடசாலையில் எட்டாம் ஆண்டு படிக்கும் போதே அக்கல்லூரியில் பவள மல்லிகை என்றொரு கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்து அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்துள்ளார். தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி ஆசிய நாளிதழ்களில் இவரின் ஆக்கங்கள் 1972-ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்தன. அத்தோடு உள்ளுர் சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

அத்தனையும் முத்துக்கள் (சிறுகதை) 2003-ம் ஆண்டு, பொய்த் தூக்கங்கள் (சிறுகதை) 2004-ம் ஆண்டும், நா இடற வாய் தவறி (கவிதை) 2009-ம் ஆண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறார் பாத்திமா. முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றார்.

விருது

  • கலாபூஷணம் விருது

மதிப்பீடு

பாத்திமா முகம்மத் பெண்களின் பிரச்சனைகளை முதன்மையாகக் கொண்ட படைப்புகள் எழுதினார்.

நூல் பட்டியல்

  • அத்தனையும் முத்துக்கள் (சிறுகதை, 2003)
  • பொய்த் தூக்கங்கள் (சிறுகதை, 2004)
  • நா இடற வாய் தவறி (கவிதை, 2009)

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.