under review

அவள் விகடன்

From Tamil Wiki
Revision as of 21:38, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
விகடன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: விகடன் (பெயர் பட்டியல்)
அவள் விகடன் (இதழ்)

அவள் விகடன் (இதழ்) (அக்டோபர், 1998) பெண்களுக்கான மாதம் இருமுறை வெளியாகும் பொழுதுபோக்கு இதழ். விகடன் குழுமத்திலிருந்து வெளிவருகிறது.

வெளியீடு

அவள் விகடனின் முதல் இதழ் அக்டோபர், 1998-ல் வெளியிடப்பட்டது. வாசன் பதிப்பகத்தின் மூலம் வெளிவரும் இதழ். எஸ். அறிவழகன் வெளியீட்டாளராக உள்ளார். மாதம் இருமுறை செவ்வாய்க்கிழமைகளில் வெளிவரும் இதழ்.

உள்ளடக்கம்

பெண்களுக்கான தன்னம்பிக்கைக் கட்டுரைகள், பெண்களின் அந்தரங்கப் பிரச்சனைகள், மருத்துவத்தீர்வுகள், பெண் ஆளுமைகளின் நேர்காணல்கள், அழகுக்குறிப்புகள், ஜோதிடம், சினிமா, கோலங்கள், புனைவுகள், ஆன்மீகம், மனநல ஆலோசனைகள், சமையல் குறிப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இதழ்.

செயல்பாடுகள்

  • 1999-ல் ஜாலிடே என்ற வாசகர் சந்திப்பு நிகழ்வை அறிமுகப்படுத்தியது
  • 'மகளிர் திருவிழா' ஒருங்கிணைத்து சென்னை தீவுத்திடலில் வாசகிகளுக்கு தொழிற்பயிற்சி அளித்தல்
  • வாசகிகளுக்கு வீட்டுத்தோட்ட பயிற்சி அளித்தல்
  • 'செல்நெட்' என்ற தலைப்பில் மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் போட்டிகள் நடத்துதல்
  • பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளின் மேற்படிப்பைத் தொடர உதவி வாங்கித்தரும் அமைப்பாகச் செயல்படல்

இலக்கிய இடம்

பெண்களுக்கான பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கிய இதழ்.

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jan-2023, 18:41:02 IST