under review

கடியை நன்னியார்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கடியை நன்னியார் (பொ.யு. 10-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். கைக்கிளைச் சூத்திரம் என்ற நூலை இயற்றினார். பழைய இலக்கண ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

கடியை நன்னியார் பொ.யு. 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

கடியை நன்னியார் பழைய இலக்கண நூலாசிரியர்களுள் ஒருவர். கைக்கிளை சூத்திரம் என்ற நூலை எழுதினார்.

பாடல் நடை

கைக்கிளைச் சூத்திரம்

'இருதலைக் காம மன்றிக் கைக்கிளை
யொருதலைக் காம மாகக் கூறிய
விலக்கண மரபி னியல்புற நாடி
யதர்ப்பட மொழிந்தனர் புலவ ரதுவே
பெறுதி வெண்பா வுரித்தாய் மற்றதன்
இறுதி யெழுசீ ராசிரி யம்மே.'

'வெண்பா வாசிரி யத்தாய் மற்றதன்
இறுதி யெழுசீ ராசிரி யம்மே.'

'கைக்கிளை யாசிரியம் வருவ தாயின்
முச்சீ ரெழுத்தின் றாகி முடிவடி
யெச்சீ ரானு மேகாரத் திறுமே.'

சான்று

  • யாப்பருங்கலம் செய்யுளியல் 2-ம் சூத்திர விருத்தியுரையில் உரையாசிரியர், கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்:

"கைக்கிளையும், வெண்பா முதலாய் ஆசிரியம் ஈறாய் வருகின்றுழி ஆசிரியவடி இரண்டேயாய், அவற்று ளீற்றடி நாற்சீரா யீற்றயலடி முச்சீரானே வருவதெனக் கொள்க. என்னை?"

  • யாப்பருங்கலம், செய்யுளியல் 18-ம் சூத்திர விருத்தியுரையில் உரையாசிரியர், கடிய நன்னியாரை மேற்கோள் காட்டுகிறார்:

"கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியம் வரும்வழி எருத்தடி முச்சீரான் வரப்பெறா வென்பர் கடிய நன்னியார் எனக் கொள்க. என்னை?

நூல் பட்டியல்

  • கைக்கிளை சூத்திரம்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 11:15:22 IST