under review

சுரேஷ் பரதன்

From Tamil Wiki
Revision as of 00:35, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:கவிஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சுரேஷ் பரதன்

சுரேஷ் பரதன் (ப.இசக்கியப்பன்.) (பிறப்பு: மே 25, 1971) கவிஞர், சிறுகதையாளர். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள்,சிறுகதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

சுரேஷ் பரதன், மே 25, 1971-ல் பரதன், கணபதியம்மாள் இணையருக்கு மகனாக திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் பிறந்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரையிலும், பள்ளியிறுதி வகுப்பை ம.தி. தா இந்து மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பின்னர் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் கணினியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். அலகாபாத்திலிருக்கும் சாம் ஹிக்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் கணினியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சுரேஷ் பரதன் மே 27, 1998-ல் பா. வனிதா ரெஜியை மணந்தார். மகள் உதயா.

கணினி துறையில் சில சிறிய நிறுவனங்களில் 2001-ம் ஆண்டுவரை பணிபுரிந்த சுரேஷ் பரதன், 2001 முதல் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார்.

சுரேஷ் பரதன்
சுரேஷ் பரதன் நூல் வெளியீட்டில்

இலக்கிய வாழ்க்கை

சுரேஷ் பரதன் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை கிளை நூலகம் சார்ந்து இயங்கிய வாசகர் வட்டம், இலக்கிய அமைப்பின் சார்பில் 1990-களில் 'எரிதழல்'எனும் கையெழுத்துப் பத்திரிக்கையை அதன் இணையாசிரியராய் இருந்து தொடர்ந்து மூன்றாண்டு காலம் நடத்தினார்.

1991 முதல் கவிதைகள், கதைகள் எழுதி வருகிறார். 'ஊர் நடுவே ஒரு வன தேவதை' என்ற முதல் கவிதைத் தொகுப்பு 2018-ல் நான்காவது கோணம் பதிப்பக வெளியீடாக வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பான 'சந்நதம்' மற்றும் இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'ஈரூசற்தாண்டவம்' என்ற இரண்டு புத்தகங்களும் 2023-ல் சுவடு பதிப்பகத்தின் வழியாக வெளியாயின. தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார், கலகம், வாசக சாலை,யாவரும் ஆகிய இணைய இதழ்களிலும், சிற்றுளி, படைப்புக் குழுமத்தின்தகவு மற்றும் வாசக சாலை குழுமத்தின் புரவி போன்ற அச்சு இதழ்களிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.

விருதுகள்

  • சிவகாசி பாரதி இலக்கியச் சங்கம் வழங்கிய இலச்சுமி அம்மாள் விருது 2023-ம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பு விருது -சந்நதம் சிறுகதைத் தொகுப்புக்காக
  • சிவகாசி பாரதி இலக்கியச் சங்கம் வழங்கிய இலச்சுமி அம்மாள் விருது 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்பு விருது. 'ஈரூசற்தாண்டவம்' கவிதைத் தொகுப்புக்காக
  • திகிழி விருது 2019 (ஊர் நடுவே ஒரு வன தேவதை நூலுக்காக)

இலக்கிய இடம்

சுரேஷ் பரதன் கவிஞர், சிறுகதையாசிரியர் என்னும் நிலைகளில் இலக்கியப் பங்களிப்பாற்றியுள்ளார்.

நூல்கள்

கவிதை
  • ஊர் நடுவே ஒரு வன தேவதை ( 2018, நான்காவது கோணம் பதிப்பகம்)
  • ஈரூசற்தாண்டவம்(2023, சுவடு பதிப்பகம்)
சிறுகதை
  • சந்நதம்(2023, சுவடு பதிப்பகம்)
அமேஸான் கிண்டில் நூல்கள்
  • தேவதைக் கதைகள்
  • மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.: ஒரு சிறு அறிமுகம்.
இணையப்பக்கம்
  • அகப்புறம்

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Aug-2025, 18:41:04 IST