under review

மன்னம்பாடியார்

From Tamil Wiki
Revision as of 17:36, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மன்னம்பாடியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மன்னம்பாடியார் இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக் களப்பில் பிறந்தார். இயற்பெயர் பற்றிய தகவல் இல்லை. இவரது பெயர் 'மன்னன் பாடியார்', 'வண்ணம் பாடியார்' என்றும் திரித்தும் சொல்லப்படுவதுண்டு. 'மன்னம்பாடியார்' என ஏடுகளில் உள்ளது. இளமைக் காலத்தில் தமிழ் கற்றார். மாந்திரீகம், ஜோதிடம், விஷவைத்தியம் கற்றார்.

தனிவாழ்க்கை

தன் இருபத்துநான்காம் வயதில் வள்ளி நாச்சியை மணந்தார். முருகன் என்ற மகன் இளமையிலேயே இறந்துவிட்டான். இந்தியாவில் பிறந்து மட்டக்களப்பிலே குடியேறி திண்ணைப் பள்ளிக்கூடத்தை நடத்திவந்தவரான 'ஆரியமாநாகர்' இவர் என்றும் கூறுவர்.

இலக்கிய வாழ்க்கை

மன்னம்பாடியார் சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

படைப்புகள்

  • கதிரைமலையந்தாதி
  • தோன்றிச் சிலேடை வெண்பா
  • தோன்றித் தலபுராணம்
  • மட்டுநகர்ப் புதுமை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Oct-2023, 01:33:33 IST