under review

தெற்கத்தி பாணிக் கூத்து

From Tamil Wiki
Revision as of 16:02, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தெற்கத்தி பாணிக் கூத்து தமிழ்நாட்டின் பழங்கலைகளில் ஒன்றான தெருக்கூத்தின் பாணிகளில் ஒன்று.

நிகழ்த்தும் இடங்கள்

தமிழ்நாட்டில் தென்னாற்காடு, திருவண்ணாமலை (சில பகுதிகள்), விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பகுதி, புதுச்சேரி மாநிலம் ஆகிய இடங்களில் தெற்கத்தி பாணிக்கூத்து ஆடப்படுகிறது.

தன்மைகள்

தெற்கத்தி பாணிக் கூத்துக் கலைஞர்கள் பெரும்பாலும் ஆதிதிராவிடர்கள், வண்ணார், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக கூத்துக் கலைஞர்களாக உள்ளனர். ஒப்பனைகளிலும் நிகழ்த்தல் முறையிலும் வடக்கத்தி பாணியிலிருந்து வேறுபட்டவர்கள். வடக்கத்தி, மேற்கத்தி பாணிக் கூத்துகளை ஒப்பிட தெற்கத்தி பாணிக் கூத்து பழமரபைச் சார்ந்தது என்று ஆய்வாளர்கள் கருதினர்.

இசைக்கருவிகள்
  • கூத்துக் கலைஞர்கள் முகவீணையைப் பயன்படுத்தமாட்டார்கள்.
  • தெற்கத்தி பாணிக் கூத்தில் மிருதங்கம், டோலக், சுருதிப் பெட்டி ஆகியவை இசைக் கருவிகளாக உள்ளது.
  • ஹார்மோனியம் இந்தக் கூத்து மரபில் இல்லை.
  • கனமான இரண்டு பெரிய தாளங்கள், ராக தாள வேறுபாடு சொல்லப்படாத மெட்டுக்களின் பயன்பாடு, நின்ற இடத்திலேயே வேகமாகச் சுற்றும் கிறிக்கி, தாள இசையோடு தொடர்ந்து வசனம் பேசுவது, சூரன் போன்ற எதிர்க்கதாப்பாத்திரங்களில் கிரீடங்களில் பயன்படுத்தப்படும் கோழி இறகுகள், வண்ணக்கோடுகள் (மாலுகள்) கொண்டு முக ஒப்பனையை பொலிவாக்கிக் கொள்ளாத தன்மை ஆகியவை இந்தப் பாணியின் நிகழ்த்துக் கூறுகளாகக் கொள்ளலாம்.
ஒப்பனை
  • பொலிவான ஆடை ஆபரணங்கள் மற்றும் ஒப்பனைகள் இல்லை. பொலிவற்ற ஒப்பனைகளும் ஆடைகளும் மரபாக பின்பற்றப்படுகிறது.
  • கூத்தர்கள் இடுப்பில் கட்டும் வட்டுடுப்பு முறை பழமரபைச் சேர்ந்தது. வட்டுடுப்பு என்பது பல சேலைகளை நீள்வாக்கில் மடித்து ஒன்றன்மேல் ஒன்றாய் இடுப்பில் கட்டிக் கொள்வது. தெருக்கூத்து தொழில்முறையாக இல்லாதபோது இத்தகைய வட்டுடுப்பு முறை இருந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.

இணைப்புகள்

உசாத்துணை



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 12:24:05 IST