அழகியல்
அழகியல் (Aesthetics) (முருகியல்) இயற்கையிலும் கலையிலும் உள்ள அழகை அதன் இயக்கம், நெறிகள், நுட்பங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஆராய்வதும் வகுத்துக்கொள்வதும் அழகியல் எனப்படுகிறது. அழகியல் இன்று இலக்கியம், கலைகள் ஆகியவற்றில் முதன்மையாக பயன்படுத்தப்படும் சொல். அழகியல் தத்துவத்திலும் இலக்கியம் மற்றும் கலைக்கோட்பாடுகளிலும் பயன்படுத்தப்படும் அடிப்படைக் கருத்துருவம்.
சொல்
ஆங்கிலச் சொல்லான aesthetic என்பது கிரேக்கச் சொல்லான aisthētikós என்பதில் இருந்து வந்தது. புலணர்வு சார்ந்த அறிதல் என்று பொருள். இன்று நாம் பயன்படுத்தும் பொருளில் Aesthetics என்னும் சொல் விமர்சகர் ஜோசப் அடிசன் (Joseph Addison) 1712 ல் பயன்படுத்தியது எனப்படுகிறது. ஜெர்மானிய தத்துவசிந்தனையாளர் அலக்சாண்டர் பௌம்கார்ட்டன் (Alexander Baumgarten) 1750 ல் இச்சொல்லை தத்துவார்த்தமாக விரித்தெடுத்தார். ‘அழகுணர்வை அறியமுற்படுதல்’ என அவர் அழகியலுக்கு அளித்த வரையறை பொதுவாக ஏற்கப்படுகிறது
கருத்துருவம்
அழகியல் என்னும் கருத்துருவம்