under review

தில்லை செந்தில்பிரபு

From Tamil Wiki
Revision as of 12:28, 16 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected year suffix text; ; Added info on Finalised date)
தில்லை
தில்லை

தில்லை செந்தில்பிரபு யோக, தியானப் பயிற்சியாளர். தொழில்முனைவோர். கல்விப்பணியாளர். ஆனந்த சைதன்யா தியான மையம் அமைப்பின் வழியாகவும், முழுமையறிவு அமைப்பின் வழியாகவும் தியான வகுப்புகளை நடத்தி வருகிறார்.

பிறப்பு கல்வி

கல்வி

தில்லை செந்தில்பிரபு கோவை சுதந்திரா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிபையும், கோவை அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பட்டப்படிப்பையும் முடித்தார்.

தனிவாழ்க்கை

தொழில்

தில்லை செந்தில் பிரபு 1989-ல் பாதுகாப்புத்துறை பொறியியல், விமானப்பொறியியல் ஆகிய துறைகளில் பணியாற்றினார். மாக் (Mak Controls and Systems Pvt Ltd) அமைப்பின் பொதுமேலாளராகப் பணியாற்றினார். 2000த்தில் பணியில் இருந்து விலகி தியானப்பயிற்றுநராக ஆனார்.

2013 முதல் தில்லை செந்தில் பிரபு தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் நிர்வாகியாக மாக் (MAK Controls & Systems Pvt. Ltd, Coimbatore.) என்னும் அமைப்பின் துணைத்தலைவராக பணியாற்றுகிறார்.

ஆன்மிகப்பணிகள்

தில்லை செந்தில்பிரபு சைவசித்தாந்ததத்தை மணிவாசகர் மன்றத்தினூடாக புலவர் சென்னியப்பனாரிடமிருந்து கற்று சித்தாந்தப் புலவர் பட்டம் பெற்றார்.வேதஜோதிடம், பிராணயாமம் ஆகியவற்றில் முறையான பயிற்சி பெற்றார்.

தில்லை செந்தில்பிரபு 2000ல் ஈஷா தியான மையத்தில் பயிற்றுநராகச் சேந்து 13 ஆண்டுகள் முதல்நிலைப் பயிற்றுநராகப் பணியாற்றினார். வெளிநாடுகளிலும் பயிற்சி அளித்தார். 2013 முதல் தனியாக தியான யோகப் பயிற்சிகளை வழங்கி வருகிறார். 2022 முதல் முழுமையறிவு அமைப்புடன் இணைந்து பணியாற்றுகிறார்.

தில்லை 2020-ல் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையை (Ananda Chaitanya Foundation - ACF) நிறுவி, அதன் சார்பில் ஆனந்த சைதன்யா தியான மையத்தை கோவையில் குருவம்பாளையம் என்னும் ஊரில் 2023-ல் அமைத்து தியானப்பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

நவீன உளவியல் மற்றும் சிந்தனைகளை மரபான தியான, யோகப் பயிற்சிகளுடன் இணைத்து பயிற்சியளிக்கும் முறையை கடைப்பிடிக்கிறார்.

கல்விச்சேவைகள்

தில்லை செந்தில் பிரபு ஆனந்த சைதன்யா அறக்கட்டளையை கோவையில் நிறுவி, அதன் வழியாக உரிய ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களுக்கு இலக்கிய அறிமுகம் செய்யும் 'கற்கை நன்றே', திறன் மேம்படுத்தும் 'வையத்தலைமை கொள்' போன்ற பயிற்சிகளை வழங்கி வருகிறார். கல்விக்கான நிதியுதவிகளையும் அளிக்கிறார். 2023-ல் ஆனந்த சைதன்யா அறக்கட்டளைக்கான தனி கட்டிடம் நிறுவப்பட்டது.

பண்பாட்டு இடம்

தில்லை செந்தில்பிரபு நவீனச் சிந்தனைகளுடன் மரபான யோக- தியான முறைகளை நவீன உளவியல் சிந்தனைகளுடன் இணைத்து பயிற்சிகளை அளிக்கும் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் அறியப்படுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Nov-2025, 12:24:35 IST