ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் (ஜனவரி 1, 1921 முதல்) நூறாண்டுகளைக் கடந்த முதல் தமிழ்ப் பத்திரிகை.
தொடக்கம்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆன்மீக, பண்பாட்டு மாதல் இதழாகச் சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து ஜனவரி 1, 1921முதல் வெளியிடப்படுகிறது. சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த சுவாமி சர்வானந்தர் இந்த இதழினைத் தொடங்கிவைத்தார். இந்த இதழுக்கு 1921-1922 காலக்கட்டத்தில் ’அண்ணா’ என். சுப்ரமண்யம் ஆசிரியராக இருந்தார். அதன் பின்னர் 1922-1925இல் சுவாமி விபுலாநந்தர் இதன் ஆசிரியராக இருந்தார்.
சுவாமி கமலாத்மானந்தரை ஜனவரி 1977இல் ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜ் நியமித்தார். இவர் டிசம்பர் 2000 வரை (24 ஆண்டுகள் ) அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார். இவர் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியராக 1977-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றபோது, அதன் சர்குலேஷன் 1100 பிரதிகள் ஆகும். அது பின்னர் மெல்ல மெல்ல உயர்ந்து 83,000 பிரதிகள் எட்டியது. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் சர்குலேஷனை உயர்த்தும்பொருட்டு 218 ஊர்களில் ஏஜெண்ட்களை நியமித்தார். இந்தப் பத்திரிகைக்கு அப்போது 17,000 ஆயுள் சந்தாதாரர்கள் இருந்தார்கள். ‘தமிழ்நாட்டில் பத்திரிகைக் கடைகளில் விற்பனைக்கு’ என்று வந்த முதல் தமிழ் ஆன்மிக மாதஇதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்தான். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்திற்கு ஓவியர் அம்புலிமாமா சங்கர், ஓவியர் மணியம்செல்வன், ஆர்டிஸ்ட் ஜானி போன்றவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். இப்போதும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் மணியம்செல்வன், ஆர்டிஸ்ட் ஜானி ஆகியோர் இருவரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
இவர் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியராக இருந்தபோது, திருமுருக கிருபானந்தவாரியார் சுமார் 30 கதைகள்/கட்டுரைகள் எழுதினார். மேலும் கவிஞர் கண்ணதாசன் இவரது வேண்டுகோளை ஏற்று 1.‘விவேகானந்த அஞ்சலி - தாயகச் செல்வன்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை 1972-ஆம் ஆண்டு ஜனவரி விஜயம் இதழில் வெளிவந்தது.
கவிஞர் கண்ணதாசன் ‘அமாவாசை நிலவு’ என்ற தலைப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றிய ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை 1977-ஆம் ஆண்டு ஜூலை விஜயம் இதழில் வெளிவந்திருக்கிறது.
இந்த இதழ் 1921-1970 காலக்கட்டத்தில் விளம்பரங்கள், படங்கள் இன்றி வந்தது. 2007 இல் 55000 பள்ளி மாணவர்கள் இதன் சந்தாதாரர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
உசாத்துணை
https://www.youtube.com/watch?v=-XNi6Fnfeb4
https://istore.chennaimath.org/sri-ramakrishna-vijayam
https://chennaimath.org/sri-ramakrishna-vijayam
[[Category:Tamil Content]]