திருவாரூர் ஆடற்கலை
திருவாரூர் கோவில் ஓவியம், இசை, ஆடல் மூன்று கலைகளுக்கு முக்கியமான இடம். சிதம்பரம் கோவில் போல் திருவாரூர் கோவிலும்
பார்க்க: திருவாரூர் தியாகராஜர் கோவில்
தேவாசிரியன் மண்டபம்
சோழர் காலத்தில் திருவாரூர் கோவில் தேவாசிரியன் மண்டபம் கலை, இலக்கிய அரங்கேற்றத்திற்கு முக்கியமான இடமாக இருந்துள்ளது. திருவாரூர் கோவிலில் வீதிவிடங்கரான சிவன் அனைத்து கலைகளையும் தேவாசிரியன் மண்டபத்தில் அமர்ந்து பார்ப்பதாக ஐதீகம். வீதிவிடங்கர் இம்மண்டபத்தில் எழுந்தருளி ஆடலும், பாடலும் காண்பார் எனக் கல்வெட்டு சான்றுகளும் உள்ளன. தேவார நால்வருள் ஒருவரான சுந்தரர் திருத்தொண்டத்தொகை நூலை தேவாசிரியன் மண்டபத்திலேயே அரங்கேற்றினார்.
முதல் குலோத்துங்க சோழனின் 49 வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு (பொ.யு. 1118 - 19) வீதிவிடங்கர் தேவாசிரியன் மண்டபத்தில் எழுந்தருளப் புக்கத்துறை வல்லவத் தலைக்கோலி என்ற ஆடல் அணங்கின் நடனத்தைக் கண்டு களித்ததாகக் கூறுகிறது.
விக்கிரம சோழனின் கல்வெட்டு தொடரில் சித்திரை மாத சதய விழா பற்றிய குறிப்பு உள்ளது. இதில் வீதிவிடங்கப் பெருமான் தேவாசிரிய மண்டப சிம்மாசனத்தில் வீற்றிருந்த போது தியாக வினோதத் தலைக்கோலி என்ற திருக்கோவில் ஆடல்மகள் ஒருத்தி பன்னடம் புரிந்ததாள் என்ற குறிப்பு உள்ளது. மற்றொரு மன்னனின் கல்வெட்டு குறிப்பில் வீதிவிடங்கர் நடனம் கண்டதோடு வீரசோழ "அணுக்க விஜயம்" என்னும் கூத்தின் பாடலையும் ஒருங்கே கேட்டதாகக் கூறுகிறது.