அஷ்ட பைரவர்

From Tamil Wiki
அஷ்டபைரவர்

அஷ்டபைரவர் (எட்டு பைரவர்கள்) இந்து சைவ மரபின் தெய்வ உருவகங்களில் ஒன்று. பைரவர் என்னும் தெய்வம் சைவ மரபில், சிவனின் துணைத்தேவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பைரவரின் எட்டு வடிவங்கள் அஷ்டபைரவர் எனப்படுகின்றன.

தொன்மம்

சிவன் தக்கனை அழித்தபோது அவருடைய நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் பைரவர். பைரவருக்கு நாய் வாகனமாக காணப்படும். எட்டு திசைக்கொன்றாக சிவன் எட்டு பைரவர்களை படைத்தான் எனப்படுகிறது

இடம்

வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோயில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்ட பைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோயிலாக ஆறகளூர் என்னும் ஊரிலுள்ள காமநாதீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவர் கோயில் கருதப்படுகிறது.

எட்டு பைரவர்கள்

  1. அசிதாங்க பைரவர்
  2. ருரு பைரவர்
  3. சண்ட பைரவர்
  4. குரோதன பைரவர்
  5. உன்மத்த பைரவர்
  6. கபால பைரவர்
  7. பீஷண பைரவர்
  8. கால பைரவர்
அசிதாங்க பைரவர்

அசிதாங்க பைரவரின் வாகனம் அன்னம். இணை பிராம்மி. காசி மாநகரில் உள்ள விருத்தகாலர் கோவிலில் இந்த பைரவர் நிறுவப்பட்டுள்ளார்

ருரு பைரவர்

ருருபைரவரின் வாகனம் காளை (ரிஷபம்) இவருடைய தேவதையாக மகேஸ்வரி. காசி மாநகரில் உள்ள காமாட்சி கோவிலில் இந்த பைரவர் அருள்புரிகிறார்.

சண்ட பைரவர்

சண்டபைரவரின் வாகனம் மயில் . இவரது சக்தி வடிவம் கௌமாரி. காசி மாநகரில் உள்ள துர்க்கை கோவிலில் இந்த பைரவர் இருக்கிறார்

குரோதன பைரவர்

குரோதன பைரவரு கருடன் வாகனம். சக்தி வடிவம், வைஷ்ணவி. காசி மாநகரில் உள்ள காமாட்சி கோவிலில் இந்த பைரவரை தரிசிக்கலாம்.

உன்மத்த பைரவர்

உன்மத்த பைரவரின் வாகனம் குதிரை. சக்திவடிவம் வராகி. காசியில் பீமசண்டி ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ளார்

கபால பைரவர்

கபால பைரவர் யானையை வாகனமாக வைத்திருப்பவர். இவரது சக்தி வடிவமாக இந்திராணி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள லாட் பசார் கோவிலில் இந்த பைரவர் அருள்கிறார்.

பீஷண பைரவர்

பீஷண பைரவருக்கு சிங்கம் வாகனமாக இருக்கிறது. இவரது சக்தி வடிவமாக சாமுண்டி விளங்குகிறார். காசி மாநகரில் உள்ள பூத பைரவ கோவிலில் இந்த பைரவரை தரிசனம் செய்யலாம்.

சம்ஹார பைரவர் அல்லது காலபைரவர்

சம்ஹார பைரவர் நாய் வாகனத்தைக் கொண்டவர். இவரது சக்தி வடிவமாக சண்டிகை தேவி விளங்குகிறாள். காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் இந்த பைரவர் அருள்பாலிக்கிறார்.

உசாத்துணை