being created

ஆதலையூர் சூரியகுமார்

From Tamil Wiki
Revision as of 20:41, 4 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

ஆதலையூர் சூரியகுமார்


ஆதலையூர் சூரியகுமார் கவிஞர், நாவல், சிறுகதை படைப்பாளர், பத்திரிக்கையாளர், சுயமுன்னேற்ற பேச்சாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர், ஆய்வாளர், பள்ளி ஆசிரியர். தன்னுடைய இலக்கியப் படைப்புகளுக்காகக் கல்கி, குமுதம், ஆனந்த விகடன், தினமலர், தினமணி உள்ளிட்ட இதழ்களில் பல பரிசுகளைப் பெற்றவர். இவரது ஆசிரியர் பணியைப் பாராட்டி, தமிழக அரசு 'கனவு ஆசிரியர்' விருது வழங்கியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சிப் பேரவை குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

வரலாறில் இளங்கலை, முதுகலை, தமிழில் முதுகலை, கல்வியியலில் முதுகலை பட்டங்களையும் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரது வழிகாட்டுதல்படி இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பணியில் பணி புரிகிறார்கள். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினராக மேதகு தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்டவர். ஆசிரியர் பணியில் 20 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தென்குவளைவேலி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அசிரியராகப் பணியாற்றுகிறார்.

தனிவாழ்க்கை   

 

இலக்கிய வாழ்க்கை

ஆசிரியர் பணியிலும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி அவர்களை உயர்த்தும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் தன்னுடைய உள்ளார்ந்த இலக்கிய விருப்பத்தால் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வருகிறார். இதுவரை 30க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஆதலையூர் சூரியகுமார்
கரிகாலன் சபதம்

இலக்கிய இடம்

கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை என்ற இலக்கிய நூலினை அடிப்படையாகக் கொண்டு கரிகாலனின் வரலாற்றை மையப்படுத்திக் ‘கரிகாலன் சபதம்’ என்ற 590 பக்க நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல் ஒருபுறம் வரலாற்று நாவலாகவும் மறுபுறம் சரித்திர நாவலாகவும் விரிவுகொண்டுள்ளது. இவரின் ஒவ்வொரு படைப்பிலும் வரலாற்றின் நிழல் படிந்தே உள்ளது. வரலாற்றைச் சில புள்ளிகளாக வைத்து, அதனைச் சுற்றிப் புனைவினை வளைத்து, இழுத்து கோலமாக்குகிறார். அதனால், இவரின் படைப்புகளில் நம்பகத் தன்மை மிகுகிறது. நேரடியான கதைகூறும் உத்தியால் வாசகரை எளிதில் ஈர்த்துவிடுகிறார்.

நூல்கள்

நாவல்கள்
  1. நீர் தேடும் நெஞ்சங்கள் - 2019
  2. பாராசூட் பறவைகள் - 2020
  3. கரிகாலன் சபதம் - 2020
சிறுகதைத் தொகுப்புகள்
  1. பச்சை விளக்கு எரிகிறது - 2019
  2. கல் தேசம் - 2010
கவிதைத் தொகுப்புகள்
  1. தொடர்பு எல்லைக்கு வெளியே - 2008 (திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது)
  2. காற்றில் அலையும் செய்திகள் - 2019
தன்னம்பிக்கை நூல்
  1. மலருங்கள் மாணவர்களே - 2007
பயண நூல்கள்
  1. குகைக்குள் தெரிந்த வெளிச்சம் - 2006
  2. தூர தேசத்தில் துருவப் பறவைகள் - 2007
அறிவியல் நூல்
  1. செல்பி வித் சயின்ஸ் அறிவியல் நூல் -2019 (இலக்கிய பீடம் பரிசு பெற்றது)
தல வரலாறு
  1. அருள்மிகு பீமேஸ்வரர் சுவாமி - 2011
பிறவகை நூல்கள்
  1. ஆடுவோம்! பாடுவோம்! படிப்போம்! - 2012
  2. திருக்குறள் நன்னெறி நூல்கள் (7 தொகுதிகள்) உயர்நீதிமன்றத்தின் பாராட்டு பெற்றவை - 2017
  3. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வழிகாட்டி நூல்கள் (7 தொகுதிகள்) -2013
  4. கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான வழிகாட்டி நூல் -2014

சிறப்புகள்

  1. உலகின் முதல் நீண்ட நாவலான எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ நாவலுக்குத்தான் இசை வௌியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதலையூர் சூரியகுமார் எழுதிய ‘கரிகாலன் சபதம்’ என்ற நாவலுக்கும் இசை வெளியிடப்பட்டது.
  2. இவர் எழுதிய ‘காற்றில் அலையும் செய்திகள்’ என்ற கவிதை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
  3. தி இந்து தமிழ், தினமலர், தினகரன் ஆகிய நாளிதழ்களில் அறிவியல் தொடர் எழுதியுள்ளார்.

பரிசுகள்

  1. ஆனந்த விகடன் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 5000 /- (1995)
  2. தினமலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 15,000/- (2011)
  3. தினமணி நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு ரூபாய் 10,000/- (2019)
  4. வானதி மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 5000/- (2017)
  5. குமுதம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 3000/- (2018)
  6. இலக்கிய பீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டு முறை மூன்றாம் பரிசு (2018, 2019)
  7. கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசு
  8. தினமணி நடத்திய சிறுகதைப் போட்டிகளில் 5 முறை பரிசு
  9. குமுதம் நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு (1997)

விருதுகள்

  1. திருப்பூர் ரோட்டரி கிளப் வழங்கிய சிறந்த தொழிற்கல்வி விருது - 2007
  2. சென்னை பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் வழங்கிய சிறந்த தமிழ் ஆசிரியருக்கான விருது - 2007
  3. திருப்பூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறந்த கவிஞருக்கான விருது - 2008
  4. தினமலர் வழங்கிய லட்சிய ஆசிரியர் விருது - 2014
  5. தமிழக அரசு வழங்கிய கனவு ஆசிரியர் விருது - 2017
  6. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய திருக்குறள் விழிப்புணர்வு விருது - 2017
  7. புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கிய புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017
  8. சிறந்த ஆசிரியருக்கான மதுரை மாவட்ட ஆட்சியர் விருது - 2017
  9. தி இந்து தமிழ் நாளிதழ் வழங்கிய அன்பாசிரியர் விருது - 2020

உசாத்துணை

  1. ‘கரிகாலன் சபதம்’ சரித்திர நாவல் - இசை வெளியீடு - https://www.youtube.com/watch?v=Iey-aLPsYvM
  2. https://www.youtube.com/watch?v=fLvwarBPhoQ&list=PLZuhtqa5If9YUTZlDD7GTXLXAES5gwlIG
  3. http://dvisit.in/suriyakumar.html
  4. https://kandeepam.wordpress.com/2017/07/23/4-21-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/
  5. https://m.dinamalar.com/detail.php?id=2868137
  6. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/dec/13/a-book-about-karikalan-3522487.html
  7. https://www.amazon.in/s?i=digital-text&rh=p_27%3AAadhalaiyur+Suriyakumar&s=relevancerank&text=Aadhalaiyur+Suriyakumar&ref=dp_byline_sr_ebooks_1

[[Category:Tamil Content]] [[Category:Tamil Content]]