under review

மற முல்லை

From Tamil Wiki
Revision as of 03:44, 26 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மற முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. மறவனது வீர மேம்பாட்டைக் கூறுவது மற முல்லை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வீரம் மிக்க அரசன், மறவர்கள் விரும்பும்படி போர்க்களத்தில் வென்ற சிறப்பைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வெள்வாள் வேந்தன் வேண்டியது ஈயவும்
கொள்ளா மறவன் கொதிப்பு உரைத்தன்று(கொளு 8.27)

வெண்பா

வில்நவில் தோளானும் வேண்டிய கொள்க என்னும்
கல்நவில் திண்தோள் கழலானும் - மன்னன் முன்
ஒன்றான் அழல் விழியான் ஒள்வாள் வலன் ஏந்தி
நின்றான் நெடிய மொழிந்து (181)

பொருள்: அரசன் பொருள் கொடுக்கவும் அதை வாங்காது தனது வாளைக் கையில் ஏந்தி வீரவுரைகள் கூறி நின்றான் வீரன்.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2025, 21:17:39 IST