under review

பொருந வாகை

From Tamil Wiki
Revision as of 03:44, 25 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பொருந வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வாகைத்திணையில் அரசனின் போர் வெற்றிச் சிறப்பைத் தவிரவும் பிற மக்களின் சிறப்புகளும் கூறப்படுகின்றன. பொருநருக்கான (ஒப்பிட்டு நோக்குபவர்) இலக்கணத்தைக் கூறுவது பொருந வாகை.

நினது புகழொடு நின் பெருநிலையினையும் நோக்கி, யாரையும் இகழ்தலைக் கைவிடுக' என எடுத்துக் கூறுவது பொருந வாகை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் புகழும் சிறப்பும் மிக்கவர்கள் பிறர் புகழையும் சிறப்பையும் ஒப்பு நோக்கி (பொருநுதல்) இகழாது இருப்பது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

புகழொடு பெருமை நோக்கி யாரையும்
இகழ்தல் ஓம்பன்மின் எனஉரைத்தன்று(கொளு 8.12 )

வெண்பா

வெள்ளம் போல் தானை வியந்து விரிவாரை
எள்ளி உணர்தல் இயல்பன்று - தெள்ளியார்
ஆறுமேல் ஆறியபின் அன்றித் தம் கைக்கொள்ளார்
நீறுமேல் பூத்த நெருப்பு (166)

பொருள்: வெண்பா அமைச்சர் கூற்றாக அரசனுக்கு வெற்றி பெறும் வழி சொல்வதாக அமைந்துள்ளது. கடல்போன்ற தானைப் பெருக்கினை உடையோம் யாம்' என்று வியந்து, பகைவரை இகழ்வது இயல்பன்று. தெளிந்த அறிவாளர், சாம்பல் மூடிய தழலை, அது முற்றும் ஆறியபின், அல்லாது, தங்கள் கையில் ஏந்தமாட்டார்.

தம் வலிமை யொன்றையே பெரிதெனக் கருதாது பிறர் வலிமையையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்; அப்போதுதான் வெற்றி கிட்டும் என்பது இதன் கருத்து.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jul-2025, 21:26:28 IST