under review

அருளொடு நீங்கல்

From Tamil Wiki
Revision as of 03:44, 9 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அருளொடு நீங்கல் வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. அருளைக் கடைப்பிடித்து உலகை நீங்கலே மெய்யான வெற்றி எனக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் முழங்கும் கடலையுடைய உலகத்தின் துன்பத்தை உணர்ந்து அதன் மீதுள்ள பற்றைத் தவிர்த்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

ஒலிகடல் வையகத்து
நலிவு கண்டு நயப்பு அவிந்தன்று(கொளு 8.34 )

வெண்பா

கயக்கிய நோய்வாய்க் கைஇகந்து நம்மை
இயக்கிய யாக்கை இறாமுன் - மயக்கிய
பண்படா வைகும் பயன் ஞால நீள்வலை
உள்படாம் போதல் உறும் (188 )

பொருள்: நிலையற்றதும் நோய்க்கு இடமானதுமான இந்த ஊன் உடம்பு அழிவதற்கு முன்பாகவே, இந்த உலகின் வஞ்சனையான இயல்பை அறிந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பும் அருளும் காட்டும் பெருநோக்கத்துடன் வாழ்ந்து உலகம் என்னும் வலையில் சிக்காமல் தப்பி தக்க தருணத்தில் வாழ்வை நீத்தலே உறுதியான பொருள்.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Jul-2025, 10:22:19 IST