மூதின் முல்லை

From Tamil Wiki
Revision as of 04:30, 6 July 2025 by Jayashree (talk | contribs)

மூதின் முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. பழைய மறக்குடியில் பிறந்தோரது மேம்பாடு என்பது மூதில் முல்லை. குறிப்பாகப் பெண்களின் மறப்பண்பினைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வேலையுடைய ஆடவர்க்கு மட்டுமன்றி வீரக்குடியில் பிறந்த பெண்டிர்க்கும் வீரப் பெருமிதம் உண்டு என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

அடல்வேல் ஆடவர்க்கு அன்றியும் அவ்வில்
மடவரன் மகளிர்க்கு மறம் மீகத்தன்று(கொளு 8.21)

வெண்பா

வந்தபடை நோனான் வாயில் முலைபறித்து
வெந்திறல் எ·கம் இறைக் கொளீஇ - முந்தை
முதல்வர்கல் தான் காட்டி மூதில் மடவாள்
புதல்வனைச் செல்க என்றாள் போர்க்கு (175)

பொருள்: பகைப்படை தன்நாட்டின்மீது எதிர்த்து வருதலைப் பொறாதவளாய்ப் பாலுண்ணும் தன் பிள்ளையிடம், வீட்டிலிருந்த வேலினை வளைவு நிமிர்த்திக் கையில் கொடுத்து, தன் முன்னோர் வீரமரணம் எய்தி நடுகல்லில் தெய்வமாக நிற்கும் மாட்சியை அவனுக்குக் காட்டி, அவனைப் போர்க்களம் நோக்கிச் செல்ல விடுப்பாள் வீரத்தாய்.

புறநானூற்றில் மூதின் முல்லை

புறநானூற்றில் 15 பாடல்கள் மூதின் முல்லைத் துறையைச் சேர்ந்தவை.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்