under review

ஆழி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 03:44, 25 June 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஆழி (நன்றி:சிற்றிதழ் உலகம்)

ஆழி (2005) கடலூரிலிருந்து ஆழி வீரமணியின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த கலை இலக்கியச் சிற்றிதழ்.

வரலாறு

ஆழி முதல் இதழ் ஆகஸ்ட் 15, 2005 ஆண்டு வெளியானது. ஆழி இதழின் நிறுவனரும் ஆசிரியருமாக ஆழி வீரமணி செயல்பட்டார். கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டத்தில் உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவரான ஆழி வீரமணி தனது கல்லூரிக் காலத்தில் 'களம் புதிது' இதழாசிரியர் கரிகாலன் மற்றும் பேராசிரியர் வே.சபாநாயகம் ஆகியோரின் அறிவுரையுடன் இதழைத் தொடங்கியதாக கூறியுள்ளார். தனக்கு பக்கத்து கிராமமான குப்பநத்தத்தில் நண்பர் சிவா நடத்திய 'ஆவாரம் பூ' இதழே ஆழி இதழைத் தொடங்கும் எண்ணத்தைக் கொடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஆழி 6 இதழ்களுக்கு பின் வெளிவராமலானது.

உள்ளடக்கம்

ஆழி இதழில் சிறுகதைகள், கட்டுரைகள், குறும்படங்கள் குறித்த விமர்சன கட்டுரைகளும் அதிகளவில் கவிதைகளும் வெளியாயின.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jun-2025, 10:52:35 IST