எம். ஜெகந்நாத நாயக்கர்
எம். ஜெகந்நாத நாயக்கர் (பிறப்பு: 1937) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்(ஆசான்). பெண் வேடங்கள் அதிகம் ஏற்று ஆடுபவர்.
வாழ்க்கைக் குறிப்பு
எம். ஜெகந்நாத நாயக்கர் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பால்செட்டி சத்திரத்தில் 1937-ல் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். தெருக்கூத்து இல்லாத சமயங்களில் விவசாயம் பார்த்தார்.
கலை வாழ்க்கை
எம். ஜெகந்நாத நாயக்கரின் ஆசான்கள் திருவேங்கடம் நெம்மிலி, முட்டவாக்கம் கோவிந்த நாயக்கர். இருபத்தி ஒன்பது வயது முதல் தெருக்கூத்தில் பங்கு கொள்கிறார். வெண்பாக்கம் வெங்கடேஸ்வரா நாடக மன்றம், வதியூர் நாடக லட்சுமி அம்மன் மன்றம் ஆகியவற்றில் தெருக்கூத்துகள் ஆடினார். 'சேனாதிபதி' கூத்தை மொசரவாக்கம் வாத்தியார் கோவிந்தனிடம் கற்றார். ஹார்மோனியம் வாசிப்பார்.
'இரணிய விலாசம்' கூத்தில் நீலாவதி, 'திரெளபதி துகில்' மற்றும் 'சயிந்தவ பங்கம்' கூத்துகளில் திரெளபதி, கிருஷ்ணன் ஆகிய வேடங்களைப் போட்டு ஆடினார்.
மாணவர்கள்
- ஆறுமுகம்
- பழனி
- கோதண்டம்
- ராஜி
- சுரேஷ்
பங்கேற்ற கூத்துகள்
- இரணிய விலாசம்
- திரெளபதி துகில்
- சயிந்தவ பங்கம்
- சுந்தரி கல்யாணம்
- குறவஞ்சி
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Oct-2024, 18:17:42 IST