under review

மானசீகன்

From Tamil Wiki
Revision as of 20:14, 6 April 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected year suffix text;)
மானசீகன்

மானசீகன்(முகம்மது ரஃபீக்) (பிறப்பு:1980) தமிழ் எழுத்தாளர். மரபு மற்றும் நவீன இலக்கியம் சார்ந்து கல்லூரிகளில் சொற்பொழிவாற்றும் பேச்சாளர்.

பிறப்பு, கல்வி

மானசீகனின் இயற்பெயர் முகம்மது ரபீக். மானசீகன், தேனி மாவட்டம் உத்தம்பாளையத்தில் ஜனவரி 24, 1980 அன்று ராஜா முகம்மது - ஜமீலா இணையருக்குப் பிறந்தார். இளமையில் தனது தாத்தா சாகுல் ஹமீது வீட்டில் வளர்ந்தார். மானசீகனின் தாத்தா சாகுல் ஹமீது பள்ளி ஆசிரியராக பணியாற்றினார்.

மானசீகன் தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் , சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்றார். உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் இளங்கலை இயற்பியலும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் முதுகலைத் தமிழும் பயின்றார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கவிஞர் அபியின் கவிதைகளில் மௌனத்தின் நாவுகள் என்னும் தலைப்பில் ஆராய்ந்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய படைப்பாளிகள் சித்தரிக்கும் பெண் உலகம் என்னும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

மானசீகன் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி தமிழ்த்துறையில் 2004-ல் இருந்து பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மானசீகன் ஜுனைதா பானுவை மார்ச் 23, 2008-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அமைப்பு பணிகள்

அன்றில் இலக்கிய சுற்றம் என்னும் அமைப்பினை 2015-ம் ஆண்டு முதல் தொடங்கி நடத்தி வருகிறார். அன்றில் இலக்கிய சுற்றம் அமைப்பின் மூலம் இலக்கிய கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துகிறார். அன்றில் இலக்கிய சுற்றம் அமைப்பு சார்பாக குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. வண்ணதாசன், ச. தமிழ்செல்வன், மனுஷ்யபுத்திரன், பாரதி கிருஷ்ணகுமார், அமலன் ஸ்டேன்லி, ராம் தங்கம் ஆகிய எழுத்தாளர்களுக்கு அன்றில் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கிய வாழ்க்கை

மானசீகனின் முதல் படைப்பு 'சுபஹான மவ்லீது' சிறுகதை புதிய காற்று மாத இதழில் 2005-ம் ஆண்டு வெளியானது. பின்னர் ஆனந்த விகடன், உயிர்மை , திணை , செம்மலர் , தமிழினி , புரவி , வாசக சாலை, தகவு ஆகிய இதழ்களில் சிறுகதை , கட்டுரை , கவிதைகள் என படைப்புகளை எழுதியுள்ளார். இலக்கியத்தில் தனது ஆதர்சங்களாக கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், தமிழினி வசந்தகுமார், ஜெயமோகன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

மானசீகன் காந்தி கிராமம் பல்கலைக்கழகம், அவிநாசி லிங்கம் பல்கலைக்கழகம், கோவை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு கல்லூரிகளிலும் மரபு இலக்கியம் மற்றும் நவீன இலக்கியம் சார்ந்து உரையாற்றும் பேச்சாளாராக இருக்கிறார்.

விருதுகள்

  • தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய சங்கம் வழங்கிய மாநில விருது
  • தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்திரன் விருது
  • திருப்பூர் சக்தி விருது
  • படைப்பு குழுமத்தின் சிறந்த கட்டுரை நூலுக்கான விருது
  • ஹெச்.ஜி.ரசூல் விருது
  • வேலூர் ஸ்பார்க் கல்வி நிறுவனங்கள் வழங்கிய சிறந்த இளம் பேச்சாளருக்கான உ.வே.சா விருது
  • தேனி நாடார் சரஸ்வதி கல்விக் குழுமங்கள் வழங்கிய தமிழறிஞர் விருது

நூல்கள்

நாவல்கள்
  • மூன்றாம் பிறை
சிறுகதை தொகுப்புகள்
  • சுடர்தொடி கேளாய்
கட்டுரை நூல்கள்
  • எங்கே இருக்கிறாய் கேத்தரின்
  • வாக்காளனாகிய நான்
  • இளம்பிறைக்குள் ஒரு பூர்ணிமா
  • இசை சூஃபி
  • தமிழ்ச்சிறுகதையின் திருமூலர்- கு.அழகிரிசாமி
  • மாதவையா முதல் கிருபா வரை
கவிதை தொகுப்புகள்
  • ஏழாம் வானத்து மழை
  • மதநீராய்ப் பூத்த வனம்
  • ஏவாளைத் துரத்தும் நிழல்
  • புராதன நகரிலிருந்து வந்த ரத்தம்

இணைப்புகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.