அபிமானி
அபிமானி (மணி) (பிறப்பு: பிப்ரவரி 07, 1958) எழுத்தாளர். தூத்துக்குடி துறைமுகத்தில் முதுநிலை எழுத்தராகப் பணியாற்றினார். தமிழக அரசின் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு உள்பட பல்வேறு பரிசுகளும் விருதுகளும் பெற்றார்.
பிறப்பு, கல்வி
மணி என்னும் இயற்பெயரை உடைய அபிமானி, பிப்ரவரி 07, 1958 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி என்னும் ஊரில் இசக்கிமுத்து - ஏசுவடியாள் இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை பணகுடியில் கற்றார். நடுநிலைக் கல்வியை அஸ்ஸே பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். திருநெல்வேலி மாவட்டம் கள்ளிக்குளத்தில் உள்ள தட்சிணமாற நாடார் சங்க கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். அரசுப் பணியின் காரணமாக படிப்பிலிருந்து இடை நின்றார்.
தனி வாழ்க்கை
அபிமானி, தூத்துக்குடித் துறைமுகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். முதுநிலை எழுத்தராக உயர்வு பெற்றார். எழுத்துலகில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் விருப்ப ஓய்வு பெற்று முழு நேர எழுத்தாளராகச் செயல்பட்டார். மணமானவர். மனைவி: அமுதா.
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.