under review

மகள் மறுத்து மொழிதல்

From Tamil Wiki
Revision as of 10:34, 31 March 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மகள் மறுத்து மொழிதல் நொச்சித்திணையின் துறைகளில் ஒன்று. மகளை மணம் வேண்டியவனுக்குத் தர மறுத்ததைப் பற்றிக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கொடிய பகைமை உடைய உழிஞையான் நொச்சியானின் மகளைத் தனக்கு மணத்தில் தருமாறு வேண்ட, மதிலின் உள்ளிருக்கும் நொச்சி மன்னன் அவனது வேண்டுகோளை நிராகரிப்பது மகள் மறுத்து மொழிதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வெம்முரணான் மகள்வேண்ட
அம்மதிலோன் மறுத்துஉரைத்தன்று (கொளு 5.7)

வெண்பா

ஒள்வாள் மறவர் உருத்தெழுந்து உம்பர்நாள்
கள்வார் நறுங்கோதை காரண்மாக் - கொள்வான்
மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக்
கருங்கண்ணி வெண் கட்டுல் கால் (94 )

பொருள்: முன்நாளில் கருங்கண்ணியாகிய இவளின் இடையழகை நினைந்து, போரை ஏதுவாக வைத்து இவளை அடையலாம் என வந்த மன்னனுடைய மறவர்களின் யானைக் கோடுகளே (தந்தங்கள்) இவளது கட்டில் கால்கள் ஆகும்.


உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 09:58:31 IST