under review

வியாக்கியானம்

From Tamil Wiki
Revision as of 01:04, 20 March 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வியாக்கியானம் (கருத்துவிளக்கம்) இந்திய தத்துவ இயலின் கருத்துக்களுக்கு அளிக்கப்படும் தத்துவ விளக்கம். பொதுவாக உபநிடதங்கள் பிரம்ம சூத்திரம் போன்ற தத்துவ நூல்களிலுள்ள கருத்துக்கள் இவ்வாறு விரிவாக விளக்கம் அளிக்கப்படுகின்றன

ஆறுபடிநிலைகள்

ஒரு வியாக்கியானத்தில் ஆறு படிநிலைகள் உண்டு எனப்படுகிறது

பதஸ்சேதம் (சொற்பிரிவினை)

சம்ஸ்கிருதத்தில் சொற்களின் இணைப்பு முக்கியமான ஒரு மொழித்தனித்தன்மை. சொற்களைச் சரியாகப் பிரிப்பது பொருள்கொள்வதன் முதற்படி. (உதாரணம். பத+சேதம். சொல்+பிளப்பு.)

பதார்த்த உக்தி (சொற்பொருள்)

ஒவ்வொரு சொல்லுக்கும் மிகச்சிறந்த அர்த்தம், மிகப்பொருத்தமான அர்த்தம் கொள்ளப்படவேண்டும். அதற்கான இலக்கண முறைமை, அணிசார்ந்த அழகியல் முறைமை, வழக்காற்று முறைமை கடைபிடிக்கப்படவேண்டும்

விக்ரஹ (சொற்குறிப்பு)

ஒரு சொல் எதைக் குறிக்கும் பொருட்டு அவ்வாறு இணைந்து தோற்றமளிக்கிறதோ அந்த உட்குறிப்பு துலக்கப்படவேண்டும்

வாக்ய யோஜனா (சொற்றொடர் முறைமை)

சொற்கள் இணைந்து சொற்றொடராக ஆகி அளிக்கும் அர்த்தம் கருதப்படவேண்டும். சொற்களின் பொருள் அச்சொற்றொடரின் பொருளுடன் இசைந்திருக்கவேண்டும்

ஆக்ஷேப: (மறுப்பு )

விளக்கத்திற்கான மறுப்புகள் என்னென்ன என்பது கருத்தில்கொள்ளப்படவேண்டும்

சமாதான

அம்மறுப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படல் வேண்டும்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2025, 09:12:40 IST