under review

அழிபடை தாங்கல்

From Tamil Wiki
Revision as of 01:04, 17 March 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அழிபடை தாங்கல் நொச்சித்திணையின் துறைகளில் ஒன்று. பகைவரால் அழிந்த படை வீறு பெற்று அரணைக் காத்தலைக் குறிக்கும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் உழிஞையாரால் தாழ்வுற்ற நொச்சியார் படை வெகுண்டு அரணைக் காத்தமையைச் சொல்வது அழிபடை தாங்கல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

இழிபுஉடன்று இகல்பெருக
அழிபடை அரண்காத்தன்று (கொளு 5.6)

வெண்பா

பரிசை பலகடந்து பற்றார் எதிர்ந்தார்
எரிசெய் இகல் அரணம் கொள்மார் - புரிசை
அகத்தடி உய்யாமை அஞ்சுடர்வாள் ஓச்சி
மிகத்தடிந்தார் மேல் நின்றவர் (93)

பொருள்: உழிஞைப் படை அரணைக் கொள்வதற்குப் பகைவர் படைகளை வீழ்த்தி எதிர்த்தது. மதில்மேல் இருந்த நொச்சிப் படையோ, உழிஞையார் உட்புகாதவாறு வெட்டி வீழ்த்தியது.

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Mar-2025, 09:42:05 IST