ஆராய்ச்சி (இதழ்)
ஆராய்ச்சி (1969-1980) நாட்டாரியல் ஆய்விதர். நாட்டாரியல் அறிஞரும் மார்க்ஸிய ஆய்வாளருமான நா.வானமாமலையால் நடத்தப்பட்டது. அவர் மறைவுடன் நின்ற ஆராய்ச்சி அதன்பின் நாவாவின் புதிய ஆராய்ச்சி என்ற பெயரில் வெளிவருகிறது
பின்னணி
நா.வானமாமலை 1967-ல் 'நெல்லை ஆய்வுக் குழு' என்னும் அமைப்பை திருநெல்வேலியில் உருவாக்கினார். தமிழகப் பண்பாட்டுச்சூழலை மார்க்ஸிய கண்ணோட்டத்தில் சமூகவியல், நாட்டாரியல் சார்ந்து ஆராய்ச்சி செய்வது அந்த அமைப்பின் நோக்கம். ஆய்வு செய்யும் எவரும் பங்கேற்கலாம் என்னும் நெறியுடன் நடத்தப்பட்ட இந்த அமைப்பில் முதலில் பத்துபேர் பங்கெடுத்தனர். பின்னாளில் நாட்டாரியலிலும் இலக்கியத்திலும் புகழ்பெற்ற பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, முனைவர் ராமச்சந்திரன், மாற்கு போன்ற பலர் இந்த அமைப்பில் இருந்து உருவானவர்கள்
நெல்லை ஆய்வுக்குழுவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை வெளியிடும்பொருட்டு நா.வானமாமலை 1969ல் ஆராய்ச்சி என்னும் இதழை தொடங்கினா
இதழ் உள்ளடக்கம்
ஆராய்ச்சி இதழ் முதன்மையாக நாட்டாரியல் ஆய்வுகளையும், பண்பாட்டு ஆய்வுகளையுமே வெளியிட்டது. ஆனால் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் வரலாற்றுக்குறிப்புகளும் அதில் இடம்பெற்றன.
நிறுத்தம்
1980ல் நா.வானமாமலை மறைந்தபோது ஆராய்ச்சி நின்றது. அதன்பின் அவருடைய மாணவர்கள் அதை நாவாவின் புதிய ஆராய்ச்சி என்ற பெயரில் சில ஆண்டுகளுக்குப்பின் வெளியிட்டனர்
உசாத்துணை
https://www.hindutamil.in/news/opinion/columns/178979--4.html