under review

ராஜா சந்திரசேகர்

From Tamil Wiki
Revision as of 12:21, 3 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Date and header format correction)


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

ராஜா சந்திரசேகர்

ராஜா சந்திரசேகர் (பிப்ரவரி 9, 1955) தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார். 

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

ராஜா சந்திர சேகர் பிப்ரவரி 9, 1955-ல் சென்னையில் கண்ணன் – ராதா இணையருக்குப் பிறந்தார். தென்னாற்காடு மாவட்டம் விருதாச்சலத்தில் ஆரம்பக்கல்வி முடித்து அங்கேயே பிஸ்சி (கணித) பயின்று பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

திரைப்படடங்களில் எழுத்தாளராகவும் விளம்பரப்பட இயக்குநராகவும் பணியாற்றுகிறார். (Rghtfeel Productions)

குடும்பம்

ராஜா சந்திரசேகர் சுந்தராம்பாளை 1993ல் மணந்தார். ஒரே மகன் பெயர் அருண் முருகன்.

இலக்கியவாழ்க்கை

ராஜா சந்திரசேகரின் முதல் படைப்பு. 1984ல் எழுதிய கைக்குள் பிரபஞ்சம் என்னும் கவிதைத்தொகுதி . இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடி ஜெயகாந்தன்

விருதுகள்

2002 திருப்பூர் தமிழ் சங்க விருது (ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூல்)

திரைப்படம்

  • சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட் படத்திற்கு வசனம். அவரின் மல்லி படத்திற்கு வசனம் பாடல்கள்.
  • நவரசா படத்திற்க்கு திரைக்கதை பங்களிப்பு வசனம்.
  • கவிஞர் அபி பற்றிய ஆவணப்படம் அந்தர நடை தயாரிப்பாளர்.

நூல்கள்

  • கைக்குள் பிரபஞ்சம்
  • என்னோடு நான்
  • ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்
  • நினைவுகளின் நகரம்
  • அனுபவ சித்தனின் குறிப்புகள்
  • மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
  • மிதக்கும் யானை
  • மைக்ரோ பதிவுகள்(ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு)

உசாத்துணை