being created

திருப்புகழ்ப் புராணம்

From Tamil Wiki
Revision as of 00:12, 29 August 2022 by Jayashree (talk | contribs)

திருப்புகழ் புராணம்  என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர் இந்த நூலை இயற்றினார்.  இது சமண சமய நூல். இங்குள்ள திருப்புகழ் என்னும் சொல் அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழைக் குறிக்காது. அருகனுடைய வழியில் வந்த தீர்த்தங்கரர் ஒருவரின் புகழ் என்பதனைக் குறிக்கும் தொடரே இந் நூலிலுள்ள 'திருப்புகழ்'.

'திரு' என்னும் சொல் சமண நெறியில்  சமண மதத்தைக் குறிக்கும். இந்த நூலுக்கு முன்னர் தோன்றிய திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம் என்னும் நூலின் பெயர்களால் இதனை அறியலாம்.

திருவறம் செய்யார் ஏற்கும் தீய மட்கலத்தின் தாமம்.  
இறந்ததும் நிகழ்வும் மற்றை எதிர்வுமாம் புராணம் செய்தோன்.  

என்பன இந் நூலில் வரும் தொடர்ச்செய்திகள்.

ஆசிரியர்

மண்டலபுருடர் என்பவர் சூடாமணி நிகண்டு என்னும் நூலை இயற்றியவர். இவர் தன்னை "வீங்குநீர்ப் பழனம் சூழ்ந்த வீரமண்டலவன்" எனக் கூறிக்கொள்கிறார். வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. 'பன்னிரண்டாவது பல்பெயர்க் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி' என்னும் பகுதிக்கு எழுதப்பட்டுள்ள சிறப்புப் பாயிரத்திலுள்ள தொடரால் அறியலாம். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்தவர். பல வடசொற்களைத் தமிழ்ச்சொள்களாக ஆக்கிப் பொருளினைத் தொகுத்துக் கூறியுள்ளார். நிகண்டு நூல்கள் பலவற்றில் இவர் இயற்றிய நிகண்டு விருத்தம் என்னும் யாப்பில் உள்ளமையால் பலரும் படித்துப் புரிந்துகொண்டு போற்றுகி

நூல் அமைப்பு


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.