இரா. முத்துநாகு

From Tamil Wiki

இரா. முத்துநாகு தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், ஊடகவியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

இரா. முத்துநாகு தேனி மாவட்டத்தில் பிறந்தார். ரெங்கசமுத்திரத்தில் பள்ளிக் கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஊடகவியலாளர், பத்திரிக்கைப் புகைப்படக்காரர், புலனாய்வுச் செய்தியாளராகப் பணியாற்றியவர்

இலக்கிய வாழ்க்கை

இரா. முத்துநாகுவின் முதல் படைப்பு ”சுளுந்தீ” நாவல். பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டது. தமிழ் நிலத்தின் பூர்வக்குடிகள் வெளியேற்றப்பட்ட கதையை இங்குள்ள பல இனக்குழுக்களின் பண்பாட்டுக் கதைகளுடனும் அவர்கள் கொண்டிருந்த பாரமபரிய அறிவுடன் எழுதினார்.

இலக்கிய இடம்

"இந்நாவலை ‘நாட்டார் கலைகளஞ்சியத் தன்மை’ (encyclopedic) கொண்ட நாவல் என வகைப்படுத்தலாம். நாட்டார் வரலாற்றுக் கோணத்தில் தமிழில் எழுதப்பட்ட முன்னோடி நாவல் என கி.ராவின் கோபல்ல நாவல்களைக் குறிப்பிடலாம். பூமணி, கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால் உட்பட வெவ்வேறு நிலம் சார்ந்த எழுத்தாளர்கள் நாட்டார் கூறுகளைக் கதையில் கையாண்டுள்ளார்கள். அடிப்படையில் இவர்கள் நவீன இலக்கியவாதிகள்தான். கதைக்குத் தேவையான அளவு அதன் ஆழத்தை அதிகரிக்க நாட்டார் கூறுகளைப் பயன்படுத்தி உள்ளார்கள். பூமணியின் ‘அஞ்ஞாடி’ ஒரு புதிய உடைப்பை நிகழ்த்தியது. நாட்டார் நோக்கில் மகாபாரதத்தை அணுகிய ‘கொம்மை’ அதன் அடுத்தக்கட்ட பரிணாமம் எனச் சொல்லலாம். நவீன இலக்கிய அழகியலுக்கு ஒரு மாற்றாக நாட்டார் அழகியலை உருவாக்கும் முயற்சி. அவ்வரிசையில் முழுக்க முழுக்க நாட்டார் அழகியல் கூறுகள் கொண்ட வரலாற்று நாவல் என்பதே சுளுந்தீயின் முக்கியத்துவம்." என எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

விருது

  • ”சுளுந்தீ” நாவல் 2019இல் ஆனந்தவிகடனின் சிறந்த நாவல் பரிசுபெற்றது.

இணைப்புகள்