பட்டிமன்றம் ராஜா

From Tamil Wiki
பட்டிமன்றம் ராஜா

’பட்டிமன்றம்’ ராஜா (ராஜா ஜெயராஜ்) ( 1960 )தமிழ் மேடைப்பேச்சாளர். பட்டிமன்றம் என்னும் விவாதமேடையில் புகழ்பெற்றவர். திரைப்பட நடிகர்.

பிறப்பு, கல்வி

மதுரையில் 31. ஜனவரி1960 ல் J.சிம்சன் - T.கமலாபாய் இணையருக்கு பிறந்தார். ஆரம்பக்கல்வியை கீழமாத்தூர் கிராம பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியை மதுரை புனித பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும் புகுமுக வகுப்பு மற்றும் இளங்கலை வணிகவியல் ( பி.காம்) படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் படித்தார். அஞ்சல்வழியில் எம்.ஏ (இதழியல்) பயின்றார்

தனிவாழ்க்கை

பட்டிமன்றம் ராஜா 9-செப்டெம்பர் 1983ல் லீலாவதியை மணந்தார். அசோக். R, விவேக். R என இரு மகன்கள்.  யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

மேடை, இலக்கியவாழ்க்கை

1991 ஜூலை 15 ஆம் நாள் மதுரையில் நடந்த பட்டிமன்றத்தில் அறிமுகமானார். பேராசிரியர் சாலமன் பாப்பையா, புலவர் காந்திமதி அம்மா,முனைவர் தா.கு. சுப்பிரமணியன்,பேராசிரியர் த.ராஜாராம், பாரதி பாஸ்கர் ஆகியோர் மேடையுரையில் தனக்கு முன்னோடிகள் என்கிறார். குங்குமம் வார இதழில் வெளிவந்த * ராஜாவின் பார்வையில்’ என்னும் கட்டுரைத் தொடர் முதல் எழுத்து

திரைவாழ்க்கை

சிவாஜி (2009) படம் வழியாக திரையில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நடித்துவருகிறார்

விருதுகள்

  • உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சுவிட்சர்லாந்து.. *தர்க்கத் துறை தணல்* விருது
  • உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு- சிகாகோ- வழங்கிய சிறப்புப் பட்டயம் ..
  • அமெரிக்க தமிழ்ச் சங்கம் நியூயார்க்.- *தமிழ்த் தென்றல் *

உசாத்துணை

https://cinema.vikatan.com/tamil-cinema/156314-pattimandram-raja-talks-about-his-professional-career