தத்துபூஜை

From Tamil Wiki
Revision as of 12:06, 1 July 2022 by Navingssv (talk | contribs) (Created page with "திருநங்கையர் சமூக விழாக்களுள் ஒன்று. தத்துபூஜை வயதில் அனுபவத்தில் முதன்மையாக விளங்கும் ஒரு அரவாணி மற்றொரு அரவாணியை அல்லது பிறரை உறவாகத் தத்தெடுத்து பிரகடனப்படுத்தும் சடங்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருநங்கையர் சமூக விழாக்களுள் ஒன்று. தத்துபூஜை வயதில் அனுபவத்தில் முதன்மையாக விளங்கும் ஒரு அரவாணி மற்றொரு அரவாணியை அல்லது பிறரை உறவாகத் தத்தெடுத்து பிரகடனப்படுத்தும் சடங்கு. தத்தெடுத்தலை ‘ரீத் போடுதல்’ என்றும் தத்தெடுத்துப் பதிவு செய்வதை ‘முண்டாய்த்து வைத்தல்’, ‘முண்டாச்சி வைத்தல்’ என்றும் அழைப்பர்.

தத்தெடுக்கும் முறை

தத்தெடுக்கும் முறை ஆறு பகுதிகளாக நிகழும்.

சேலா பண்ணுதல்

குரு + சேலார். குரு சேலாவைத் தத்தெடுத்தல் எனப் பொருள். குழுவில் வயதில் அல்லது அனுபவத்தில் மூத்தவரை குரு என்றழைப்பர். குருவாகக் கருதப்படும் திருநங்கையர் மற்றொரு திருநங்கையை சேலாவாகத் தேர்ந்தெடுத்து தத்தெடுத்து பதிவு செய்யும் முறை ‘சேலா பண்ணுதல்’ என்றழைப்படுகிறது.

இம்முறையில் குருவும், சேலாவும் கணவன் மனைவி உறவாகவே கருதப்படுவர்.