being created

இன்னிலை

From Tamil Wiki
Revision as of 20:35, 30 June 2022 by ASN (talk | contribs) (Para Setup)
இன்னிலை - வ.உ.சிதம்பரம் பிள்ளை உரை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய பாடலில் இடம்பெறும் நூல் இன்னிலை.

பதிப்பு வரலாறு

இன்னிலையை வ.உ.சிதம்பரம் பிள்ளை பதிப்பித்தார். வ.உ.சியால் உரை எழுதப் பெற்ற அறநூலான இன்னிலை அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் பத்து வெண்பாக்களையும் பொருட்பால் ஒன்பது வெண்பாக்களையும், இன்பத்துப்பால் பனிரெண்டு வெண்பாக்களையும், வீட்டுப்பால் பதினான்கு வெண்பாக்களையும் கொண்டுள்ளன பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றே இன்னிலை என்பது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கருத்தாக இருந்தது.

இன்னிலை பற்றி சங்குப்புலவர்

இன்னிலைக்கு உரை எழுதிய சங்குப்புலவர், தனது ஆய்வு முன்னுரையில் “உரையாசிரியர்களில் இன்னார், இந்நூற்கவிகளை மேற்கோள் காட்டி, இன்னிலையில் உள்ளது என்று குறிப்புக் காட்டியுள்ளனர் என்பதற்கு ஆதாரம் ஒன்றுமின்று. வ. உ. சி அவர்களும் சான்று காட்டினாரல்லர். உரையாசிரியர் சிலர் மேற்கோளாக இன்னிலையிலுள்ள கவிகளை எடுத்தாண்டனர் என்று வ. உ. சி. அவர்கள் கூறியதை ஆராய்ந்தால் வியப்பு விளைகின்றது. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 23 ஆம் சூத்திரம் இளம்பூரணருரை, கற்பியல், 5 ஆம் சூத்திரவுரை 12 ஆம் சூத்திரவுரை ஆகிய இடங்களைச் சுட்டி இன்னிலை நூலில் 2, 37, 29, 32, 35 எண்ணுடைய ஐந்து பாடல்களும் வந்துள்ளன என விளக்கினர். இளம் பூரணத்தை நோக்க அவற்றுள் ஒன்றேனும் வந்திலது. முந்தின பதிப்புக்களில் இருந்து பின்னர் அவை விடுபட்டனவோ என ஐயுறும் நிலையிலுள்ளது. தொல்காப்பியம் செய்யுளியல் 113 ஆம் சூத்திரம் பேராசிரியருரையில் அவர்கள் கூறியவாறே இன்னிலை 5 ஆம் செய்யுள் மேற்கோளாக வந்துள்ளது. யாப்பருங்கலவிருத்தி யுரையாசிரியரும் இன்னிலை 2 ஆம் செய்யுளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஆயினும் அக்கவிகள் இன்னிலை என்ற நூற்கவிகள் தாம் என்பதற்குச் சான்று தோன்றும் வகை ஆங்கில்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக இன்னிலை வந்த வழி இந்த வழி என்றுணர்க.” [1] என்று குறித்துள்ளார்.

வ.உ.சி.யின் ஏமாற்றம்

”திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர் 'இன்னிலை' என்ற பேரில் ஒரு நூலின் ஏட்டை வ.உ.சி.யிடம் கொடுத்து இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று எனக் கூறி வ.உ.சி.யிடம் கணிசமாக பணமும் பெற்றிருக்கிறார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இன்னிலையையும் சேர்த்து அதை பதிப்பித்தார் வ.உ.சி. இப்பதிப்பு போலியானது, தவறானது என மயிலை சீனி வேங்கடசாமி, மு. அருணாசலம் ஆகியோர் எழுதிய பின்பு வ.உ.சி.யின் பதிப்பு தவறானது என்று தெரிந்தது. 1931-ல் அனந்தராம ஐயர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று 'கைந்நிலை' என பதிப்பித்த பின்னர் வ.உ.சி. மனம் நொந்திருக்கிறார். இதை வையாபுரிப்பிள்ளையும் கு. அருணாசலக்கவுண்டரும் பதிவு செய்துள்ளனர்.” என்கிறது இக்கட்டுரை [2].

உசாத்துணை

  • இன்னிலை = https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl6luxy.TVA_BOK_0000109

அடிக்குறிப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.