being created

கரட்டூர் ராமு

From Tamil Wiki
Revision as of 20:36, 31 January 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories. கரட்டூர் ராமு (1934) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை உருவகம் செய்து இலட்சியவாத நோக்குடன் எழுதப்பட்ட காந்தியநாவல் . சீதாரமையா எழுதியது

எழுத்து, பிரசுரம்

சீதாரமையாவின் மகன் மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடத்திவந்த வேகவதி என்னும் ஆசிரமத்தில் சில காலம் இருந்தார். பின்னர் காந்தியின் சபர்மதி ஆசிரமத்திலும் இருந்தார். அந்த ஆசிரமப்பின்னணியில் இந்நாவலை எழுதினார். இதை ஆசிரமத்தில் இருந்தபடி எழுதியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார். சீதாராமையா புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் தந்தை.

கதைச்சுருக்கம்

கரட்டூர் என்னும் ஊரில் ராமு என்னும் தேசபக்தர் ஓர் ஆசிரமம் அமைக்கிறார். அங்கே அனைவரும் ஓர் இலட்சியவாழ்க்கையை வாழ்கிறார்கள். கிராமவாழ்க்கையின் எளிமையையும், பெண்களின் விடுதலையையும் முன்னிறுத்தும் நாவல் இது

இலக்கிய இடம்

தமிழில் காந்தியவாழ்க்கையை முன்வைத்து எழுதப்பட்ட நாவல்களில் ஒன்று. தமிழகத்தில் பல காந்திய ஆசிரமங்கள் இருந்தபோதிலும் ஆசிரமச்சூழலை சித்தரிக்கும் நாவல்கள் அதிகமாக எழுதப்படவில்லை. இந்நாவலே அவ்வகையில் முதல் முயற்சி. பின்னாளில் ஜெயகாந்தனின் ஜெயஜெய சங்கர காந்திய ஆசிரமம் ஒன்றை சித்தரித்தது.

உசாத்துணை

தமிழ்நாவல்- சிட்டி- சிவபாதசுந்தரம். கிறிஸ்தவ இலக்கியசங்கம்