under review

கபிலை கண்ணிய வேள்வி நிலை

From Tamil Wiki
Revision as of 18:50, 28 June 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)

கபிலைக் கண்ணிய வேள்விநிலை: தொல்காப்பியம் கூறும் பாடாண் திணைகளின் துறைகளில் ஒன்று. ஒருவனின் ஆண்மைத் திறனை சிறப்பிப்பது பாடாண் திணை. அவ்வாறு சிறப்பிப்பதற்கான காரணங்கள் துறை எனப்பட்டன. அதில் கபிலை எனப்படும் உயர்ந்த பசுவை வேள்விக்கு கொடையாக கொடுத்தல் ஒரு சிறப்பு. அதுவே கபிலை கண்ணிய வேள்வி நிலை எனப்படுகிறது

தொல்காப்பியம்

தொல்காப்பிய சூத்திரம் பாடாண் திணையில் துறைகளை இவ்வாறு வகுத்துரைக்கிறது


கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்,

அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்,

சேய் வரல் வருத்தம் வீட வாயில்

காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்,

கண்படை கண்ணிய கண்படை நிலையும்,

கபிலை கண்ணிய வேள்வி நிலையும்,

வேலை நோக்கிய விளக்கு நிலையும்,

வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉவும்,

ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்,

கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ,

தொக்க நான்கும் உள' என மொழிப

(தொல்காப்பியம். புறத்திணையியல். பொருளதிகாரம்)

இச்சூத்திரத்தில் வரும் கபிலை கண்ணிய வேள்வி நிலை என்பதை விளக்க தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் புறத்திணையைப் 12 திணைகளாகப் பகுத்துக்கொண்டுள்ள புறப்பொருள் வெண்பாமாலை நூலிலுள்ள பாடல் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தருகிறார். அந்தப் பாடல்

ருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
குருக்கண் கபிலை கொடுத்தான் - செருக்கோ(டு)
இடிமுரசத் தானை இகல்இரிய எங்கோன்
கடிமுரசம் காலைசெய் வித்து

அரசன் முரசு முழக்கத்துடன் பார்ப்பார்க்குப் பொன்னைத் தானமாக வழங்கியதோடு அழகிய கண்கள் கொண்ட கபிலை ஆநிரைகளையும் பரிசாக வழங்கினான் என்பது இதன் பொருள்.

சங்க காலத்து குறிப்பு

பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்துப் பிடித்துவந்த வருடை ஆடுகளைத் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து அவற்றையும், கபிலையையும் பார்ப்பார்க்கு வழங்கினான் என்று .காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடுகிறார்

உசாத்துணை


✅Finalised Page