கூத்தாண்டவர் திருவிழா

From Tamil Wiki
Revision as of 14:18, 28 June 2022 by Navingssv (talk | contribs)

கூத்தாண்டவர் திருவிழா மகாபாரத்தில் அரவான் களப்பலியாகும் நிகழ்வை மையமாகக் கொண்டு நடத்தப்படும் திருவிழா. இவ்விழா தமிழகத்தின் வடமாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது. திருவிழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று நிகழ்கிறது. அரவான் பலியாகிய போது அவன் தலை உயிருடன் இருந்து, உடல் மட்டும் தரையில் விழுந்து இறந்தது. வெட்டுண்ட உடல் பகுதி கூத்தாடியதால் அரவானுக்கு கூத்தாண்டவர் என்ற பெயர் வந்தது. இவ்விழா பலியிடும் சடங்கை அம்மன் கோவிலில் நிகழ்த்திக் காட்டுவது. அரவானை கூத்தாசூரன் என்றும் அழைப்பர்.

கூத்தாண்டவர்-அரவான்

இந்திர பிரஸ்தத்தில் தருமரும், திரௌபதியும் கூடியிருந்தபோது அர்ஜூனன் தருமரின் அறைக்குள் நுழைந்தான். இதனால் சீற்றம் கொண்ட தர்மர் அர்ஜூனனை ஓராண்டு அரச வேஷம் களைத்து தீர்த்த யாத்திரை செல்லுபடி கட்டளையிட்டார். அர்ஜூனனும் அதற்கு இசைந்து வேதிகனாய் தீர்த்த யாத்திரை புறப்பட்டான். அர்ஜூனன் வடகிழக்காக தன் பயணத்தை தொடர்ந்தான். வடகிழக்கின் எல்லை சென்று நாகர்கள் வாழும் நாகருலகத்தை அடைந்தான்.

நாகருலகத்தில் உலோபி என்ற அழகிய நாகக் கன்னி இருந்தாள். அவளைக் கண்டதும் அவள் மேல் காதல் கொண்டான். உலோபிக்கும் அர்ஜூனன் மேல் காதல் எழுந்தது. இருவரும் கூடி மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். பத்து மாதம் கழித்து இருவருக்கும் அரவான் பிறந்தான். பிறப்பிலேயே 32 லட்சணங்களும் பொருந்தியிருந்தான். கிருஷ்ணனைப் போல் எதிர்ரோமம் கொண்டிருந்தான்.

மகாபாரதப் போரில் பாண்டவ படைக்காக அரவான் பலியிடப்படுகிறான். அரவான் காளி கோவில் பலியாகும் நிகழ்வையே கூத்தாண்டவர் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். அரவானே கூத்தாண்டவராகக் கருதப்படுகிறான்.

இந்திரன் கூத்தாண்டவராகப் பிறப்பெடுத்ததற்கு வேறொரு கதை வழக்கிலுள்ளது. பிராமணன் ஒருவரை வதம் செய்ததால் இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானான். கூத்தாண்டவராக பூலோகத்தில் மறுபிறவி எடுத்து தலையை தவிர மற்ற உடல் பாகமனைத்தும் மறைந்து போகும் படியான சாபம் பெற்று பூலோகத்தில் இந்திரன் பிறந்தான். இச்சாபத்தை அறிந்த பூலோகத்தவர்கள் கூத்தாண்டவருக்கு பெண் தர மறுக்கின்றனர். இதனை அறிந்த கிருஷ்ணன் பெண் தோற்றம் கொண்டு கூத்தாண்டவரை மணக்கிறார். அவர்களின் திருமணம் முடிந்ததும் கூத்தாண்டவரான இந்திரன் களப்பலியில் இறக்கிறான்.

சந்திரகிரி அரசன் மனைவியுடன் தன் அரண்மனையில் வாழ்ந்தான். அவர்களுக்கு குழந்தைபேறு இல்லாததால் கிருஷ்ணனை நோக்கி தவமிருந்தனர். இருவரின் தவத்திற்கு இறங்கிய கிருஷ்ணன், பாரதப் போரில் பலியான அரவானின் தலை உயிருடன் இருந்ததால் கருடனை அழைத்து அதனை சரபங்க நதியில் வைக்கச் சொன்னார்.

சந்திரகிரி அரசன் வேட்டைக்குச் சென்ற போது சரபங்க நதிக்கரையிலுள்ள அம்மன் கோவிலில் குழந்தை தவழ்ந்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அதை கிருஷ்ணன் தங்களை அருளியதாக எண்ணி அரண்மனை எடுத்து வந்தார். சரபங்க நதியிலிருந்து எடுத்தால் அவனுக்கு ‘சரபாலன்’ எனப் பெயரிட்டனர். சந்திரகிரி மன்னர் சரபாலனுக்கு அனைத்து வித்தைகளையும் கற்பித்தார்.

கூத்தாசூரன் என்பவன் சந்திரகிரி மீது படையெடுத்து போரிட்டு சந்திரகிரியைக் கைப்பற்றினான். தன் நாட்டை இழந்த மன்னர் மனைவி மற்றும் குழந்தை சரபாலுடன் அருகிலிருந்த திட்டச்சாவடிக் காட்டிற்குச் சென்றார். சரபாலன் காட்டில் வளர்ந்தான். மன்னர் சரபாலனுக்கு தேவையான கல்வியும், பயிற்சியும் காட்டிலேயே வழங்கினார். சரபாலன் பதினாறு வயதிருந்த போது மன்னரிடம் சென்று அவர்கள் காட்டிலிருக்கும் காரணத்தை வினவினான். சந்திரகிரி மன்னர் நாடிழந்த விவரத்தை மகன் சரபாலனிடம் சொன்னார். சரபாலன் பெற்றோரை அழைத்துக் கொண்டு சந்திரகிரி மீண்டான். சந்திரகிரியில் சரபாலனுக்கும், கூத்தாசூரனுக்கும் நிகழ்ந்த போரில் கூத்தாசூரனைத் தோற்கடித்து நாட்டை தந்தையிடம் ஒப்படைத்தான்.

நாட்டை திரும்ப பெற்ற சந்திரகிரி மன்னர் சரபாலனிடம் அவன் பிறப்பு பற்றிய ரகசியத்தைச் சொன்னார். சரபாலன் தான் பிறந்த இடமான சரபங்க நதிக்குச் சென்றான். சரபாலன், “நாளை இருவரும் என்னை இதே இடத்தில் வந்து காணுங்கள்” எனச் சொல்லிவிட்டு அவ்விடம் மீண்டான். மறுநாள் இருவரும் திரும்பி வந்த போது உடலில்லாமல் சிரசு மட்டும் பூமியில் பதிந்திருந்தான் சரபாலன். தன் மகனின் நிலையைக் கண்ட பெற்றோர் கதறி அழுதனர். சரபாலன் இருவரையும் சமாதானம் செய்து, “கவலை விடுங்கள். என்னை இருவரும் சித்திரைப் பௌர்ணமியான இதே தினத்தில் வந்து தேர் அலங்காரத்தில் கூத்தாசூரனோடு போர் புரிந்த என்னைக் காணலாம். மற்ற நாளில் என் சிரசை மட்டும் காணலாம்” எனக் கூறி மறைந்தான்.

கூத்தாண்டவருக்கு சரபாலன் என்ற பெயருமுண்டு. இதன் காரணத்தால் அரவான் கூத்தாசூரன் என்றும் அழைக்கப்பட்டான் என்ற கதை வழக்கில் உள்ளது.

கூத்தாண்டவர் பற்றிய புராணக் கதைகள்

மகாபாரத அரவான் கதை

இந்திரனின் அம்சமாக குந்திதேவியின் வயிற்றில் பிறந்தவன் அர்ஜூனன். அர்ஜூனன் இந்திர பிரஸ்தத்தில் தருமரும், திரௌபதியும் கூடியிருந்தபோது அர்ஜூனன் தருமரின் அறைக்குள் நுழைந்தான். இதனால் சீற்றம் கொண்ட தர்மர் அர்ஜூனனை ஓராண்டு அரச வேஷம் களைத்து தீர்த்த யாத்திரை செல்லுபடி கட்டளையிட்டார். அர்ஜூனனும் அதற்கு இசைந்து வேதிகனாய் தீர்த்த யாத்திரை புறப்பட்டான். அர்ஜூனன் வடகிழக்காக தன் பயணத்தை தொடர்ந்தான். வடகிழக்கின் எல்லை சென்று நாகர்கள் வாழும் நாகருலகத்தை அடைந்தான்.

நாகருலகத்தில் உலோபி என்ற அழகிய நாகக் கன்னி இருந்தாள். அவளைக் கண்டதும் அவள் மேல் காதல் கொண்டான். உலோபிக்கும் அர்ஜூனன் மேல் காதல் எழுந்தது. இருவரும் கூடி மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். பத்து மாதம் கழித்து இருவருக்கும் அரவான் பிறந்தான். பிறப்பிலேயே 32 லட்சணங்கள் கொண்டும், கிருஷ்ணனைப் போல் எதிர்ரோமமும் பெற்றான். மகாபாரதப் போருக்கு முன்னால் ஜோதிடத்தில் சிறந்தவனான சகாதேவனை துரியோதனன் அணுகினான். எதிர்காலத்தை துள்ளியமாக கணிக்கும் வல்லமை பெற்ற சகாதேவன் துரியோதனனுக்கு போரில் வெல்வதற்காக களப்பலி கொடுக்கும் நாளை கணித்துச் சொன்னான். “32 லட்சணங்களும், எதிர் ரோமமும் கொண்டு ஒருவனைக அமாவாசை அன்று காளிக்கு பலியிட்டால் நீ வெல்வது உறுதி” என்றான்.

சகாதேவன் சொல் கேட்டு மீண்ட துரியோதனன் அத்தகைய லட்சணம் கொண்ட ஒருவனைத் தேடினான். தன் தம்பியின் மகன் அரவான் இருப்பதை சகுனியின் மூலம் அறிந்த துரியோதனன் அரவானிடம் சென்று அமாவாசையன்று காளிக்கு பலியாகும்படி வேண்டினான். தன் பெரியப்பாவே தன்னிடம் வந்த கேட்டதால் அரவான், “அமாவாசை வரை இந்த உடல் பின்னமாகாமல் இருந்தால் வருகிறேன்” என வாக்களித்தான்.

துரியோதனன் முதலில் சென்று அரவானை பலியிட கேட்டது குறித்தறிந்த கண்ணன் சூழ்ச்சி செய்தான். அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தி அன்று ‘அமாவாசை சடங்குகள் செய்யுங்கள்’ என்று வேதியரிடம் கட்டளையிட்டான். கண்ணன் சொல்படி சடங்குகள் நடந்தன. பின் தருமன், அர்ஜூனன் ஏனைய தம்பியர்களை அழைத்த கண்ணன் அரவானையும் உடனழைத்து, “கௌரவர்களுக்கு முன் நாம் களப்பலி கொடுக்க வேண்டும். சாமுத்திரிகா லட்சணம் 32 உம் பெற்றவர்கள் மூவர்தான் கண்ணன் நான், அர்ஜூனன் மற்றும் அவன் மகன் அரவான். எனவே நீங்கள் போரில் வெற்றி பெற என்னைப் பலியிடுங்கள் எனச் சொல்ல” அருகிலிருந்த அரவான் முன்வந்த பலியாக சம்மதித்தான்.

ஆனால் அரவான் பலியாவதற்கு முன் இரண்டு வரம் கேட்டான். ஒன்று பலியிட்ட பின்னும் தன் தலை உயிருடன் இருக்க வேண்டும், இரண்டு சாகும் முன் ஒரு பெண்ணை மணமுடிக்க வேண்டுமென்றான். அரவானின் நிபந்தனைகளுக்கு கண்ணன் சம்மதித்தான். மணமான மறுநாளே அரவான் இறப்பான் என்றறிந்ததால் அவனுக்கு பெண் தர மறுத்தனர். இதனால் கண்ணன் பெண் வேஷம் கொண்டு அரவானை திருமணம் செய்தான்.

யாமள நூலின் கணக்குபடி குரு நாட்டிலுள்ள காளிக்கு அமாவாசை முந்தைய தினம். எனவே கௌரவர்கள் அறியாத படி அன்றைய தினத்தில் அரவானை பலியிட்டனர். அரவான் தன் உறுப்புளைத் தானே அறுத்துக் காளியின் முன்புள்ள வாழையிலையில் வைத்தான். அரவான் இறந்ததும் யானையை பலியிட்டனர். போர் நடக்கும் குருஷேத்திரத்தில் அரவானின் தலையை வைத்தனர். மண்ணில் விழுந்த அரவானின் உடல் இறந்தது. வெட்டுண்ட தலை மட்டும் உயிருடன் குதித்தாடியது. தலை வெட்டப்பட்டதும் உடல் சிறிது நேரம் குதித்துப் படபடவெனத் துடிக்கும். இதனைக் கவந்தம் ஆடல், அட்டையாடல் என்பர். இவ்வாறு தலையிருக்க உடல் தானாக ஆடியதால் அரவான் ‘கூத்தாண்டவர்’ என்றழைக்கப்பட்டான்.

மறுதினம் உடல் நீங்கி தலையுடன் இருக்கும் அரவானைக் கண்ட துரியோதனன் அதிர்ச்சியுற்றான். அரவானின் தலை துரியோதனனிடம், “தந்தையின் கட்டளைக்குப் பணிந்து நான் பலியானேன். அமாவாசைக்கு முன் உடல் பின்னமாகாமல் இருந்தால் பலியாகிறேன் என்றே உங்களிடம் வாக்களித்தேன்.” எனக் கூறினான். பின் பாண்டவருக்கும், கௌரவருக்கும் நிகழ்ந்த பதினெட்டு நாள் போரையும், பாண்டவர்கள் வெற்றிக் கண்டதையும் அரவானின் தலை மட்டும் கண்டது.

கணவன் இறந்த காரணத்தினால் பெண்ணுருக் கொண்ட கண்ணன் விதவையானான். இதன் காரணமாக கண்ணனின் மறுஅவதாரமாக அரவாணிகள் தங்களை எண்ணுகின்றனர். அரவாணிகள் கூத்தாண்டவரைக் கணவனாக எண்ணித் தாலிக் கட்டிக் கொள்வதும், அரவான் இறந்ததும் தாலியறுப்பதும் சடங்காக நிகழ்கிறது.

வில்லிபாரத அரவான் கதை
மணியாட்டி மகாபாரத அரவான் கதை
வில்லுப்பாடு அரவான் கதை
இசை நாடகம் அரவான் கதை

கூத்தாண்டவர் கோவில் திருவிழா