நாலடியார்

From Tamil Wiki
Revision as of 15:29, 26 June 2022 by ASN (talk | contribs) (para aligned)

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார். இது சமண முனிவர்களால் பாடப்பட்டது. நானூறு வெண்பாக்களைக் கொண்டது. நான்கடி கொண்ட வெண்பாக்களால் ஆனதால் நாலடி எனக் கூறப்படுகிறது. நுல்லின் சிறப்புக் கருதி ‘ஆர்’ விகுதி சேர்த்து ‘நாலடியார்’ என அழைக்கப்பட்டது.

இயல் பகுப்பு

நாலடியார் கடவுள் வாழ்த்து நீங்கலாக நானூறு வெண்பாக்களைக் கொண்டுள்ளது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளாய் நாலடியார் பகுக்கப்பட்டுள்ளது. பதினொன்று இயல்களும், நாற்பது அதிகாரங்களும் கொண்டது. அதிகாரத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் நானூறு பாக்களைக் கொண்டுள்ளது. நாலடியாரைப் பால், இயல், அதிகாரமாக வகுத்தவர் பதுமனார்.

அறத்துப் பால்

இயல் - 2 : இல்லறவியல், துறவறவியல்; அதிகாரங்கள் - 13

இல்லறவியல் (6)
  1. பொறையுடைமை
  2. பிறர்மனை நயவாமை
  3. ஈகை
  4. பழவினை
  5. மெய்ம்மை
  6. தீவினை அச்சம்
துறவறவியல் (7)
  1. செல்வம் நிலையாமை
  2. இளமை நிலையாமை
  3. யாக்கை நிலையாமை
  4. அறன் வலியுறுத்தல்
  5. தூய தன்மை
  6. துறவு
  7. சினம் இன்மை

பொருட்பால்

இயல்கள் - 7 : அரசியல், நட்பியல், இன்பவியல், துன்பவியல், பொதுவியல், பகை இயல், பன்னெறியியல்; அதிகாரங்கள் - 24

அரசியல் (7)
  1. கல்வி
  2. குடிப்பிறப்பு
  3. மேன் மக்கள்
  4. பெரியாரைப் பிழையாமை
  5. நல்லினம் சேர்தல்
  6. பெருமை
  7. தாளாண்மை
நட்பியல் (4)
  1. சுற்றம் தழால்
  2. நட்பாராய்தல்
  3. நட்பிற் பிழை பொறுத்தல்
  4. கூடா நட்பு
இன்பவியல் (3)
  1. அறிவுடைமை
  2. அறிவின்மை
  3. நன்றியில் செல்வம்
துன்பவியல் (4)
  1. ஈயாமை
  2. இன்மை
  3. மானம்
  4. இரவச்சம்
பொதுவியல் (1)
  1. அவையறிதல்
பகை இயல் (4)
  1. புல்லறிவாண்மை
  2. பேதைமை
  3. கீழ்மை
  4. கயமை
பன்னெறியியல் (1)
  1. பன்னெறி

காமத்துப்பால்

இயல்கள் - 2 : இன்ப, துன்பவியல், இன்பவியல்; அதிகாரங்கள் - 3

இன்ப, துன்பவியல் (1)
  1. பொது மகளிர்
இன்பவியல் (2)
  1. கற்புடை மகளிர்
  2. காம நுதலியல்