திருச்செங்கோட்டுக் குறவஞ்சி

From Tamil Wiki
Revision as of 23:49, 22 June 2022 by Navingssv (talk | contribs) (Created page with "திருச்செங்கோட்டுக் குறவஞ்சி குறத்திப்பாட்டு சிற்றிலக்கிய பாடல்களுள் ஒன்று. திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசர் மேல் காதல் கொண்டு மோகனாங்கி பாடும் பாடல்கள் திருச்செங்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருச்செங்கோட்டுக் குறவஞ்சி குறத்திப்பாட்டு சிற்றிலக்கிய பாடல்களுள் ஒன்று. திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசர் மேல் காதல் கொண்டு மோகனாங்கி பாடும் பாடல்கள் திருச்செங்கோட்டுக் குறவஞ்சி. இதனை அர்த்தநாரீசர் குறவஞ்சி என்றும் அழைப்பர். திருச்செங்கோட்டுக் குறவஞ்சியை அர்த்தநாரீசர் குறவஞ்சி என்றும் அழைப்பர். திருச்செங்கோட்டுக் குறவஞ்சி தமிழில் எழுதப்பட்ட குறவஞ்சி பாடல்களில் அகப்பொருள் சுவை அதிகம் இடம்பெற்ற இசைப்பாடல்களைக் கொண்டது.

ஆசிரியர்

திருச்செங்கோட்டுக் குறவஞ்சியின் ஆசிரியர் பூங்கோதை. பூங்கோதை தக்கை இராமாயணம் எழுதிய எம்பெருமான் கவிராயரின் மனைவி. பூங்கோதை பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கொங்கு மண்டல சதகம் பூங்கோதையைப் பற்றி, “சிறிய இடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர் மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே”. திருச்செங்கோட்டுக் குறவஞ்சியை பூங்கோதை இயற்றினார் என ஏ.இ. ஸ்ரீரங்க முதலியாரின் தலவரலாற்றுச் சுருக்கம் மூலம் அறிய முடிகிறது. பூங்கோதை மதுரை நகரைச் சேர்ந்தவர், எம்பெருமான் கவிராயரை மணந்து சங்ககிரி வந்தார் என்றும், இருவரும் இடையர் குலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கொங்கு மண்டல சதகத்தின் மூலம் அறியமுடிகிறது.