கீறல்கள்

From Tamil Wiki

கீறல்கள் (1975) ஐசக் அருமைராசன் எழுதிய நாவல். கிறிஸ்தவத்துக்கும் கம்யூனிசக் கொள்கைகளுக்கும் இணைப்பை உருவாக்க முயலும் பிரச்சார நாவல் இது. விடுதலை இறையியல் சார்ந்து தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் இது என்று கூறப்படுகிறது

எழுத்து, பிரசுரம்

கீறல்கள் மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரில் பேராசிரியர் ஐசக் அருமைராசனால் 1978ல் எழுதப்பட்டது. நாகர்கோயிலில் கிறிஸ்தவ இலக்கிய சங்கம் இதை வெளியிட்டது.

கதைச்சுருக்கம்.

நாகர்கோயிலுக்கு அருகே புன்னைக்காயல் என்னும் ஊரில் கதை நிகழ்கிறது. கிறிஸ்தவர்களான நிலவுடைமையாளர்கள் கிறிஸ்தவர்களான மக்களை அடக்கிச் சுரண்டுகிறார்கள். வறுமையால்மேட்டுக்குடியான் என்பவரின் தென்னந்தோப்பில் தேங்காய் திருடும் செல்லப்பா அவர்களால் தாக்கப்படுகிறான். அவன் மேட்டுக்குடியானின் மகனை திருப்பித் தாக்கிவிட்டு போலீஸிடம் சிக்காமல் தலைமறைவாகிறான். அவன் செய்கை கிறிஸ்தவ மதத்தின்படி பாவம் என நினைக்கும் அவன் தந்தை வேதமணி வாத்தியார் பின்னர் அவன் செய்வதும் கிறிஸ்தவத்துக்கு உகந்ததே என்று கண்டடைகிறார்

இலக்கிய இடம்

நேரடியான பிரச்சாரம் ஒலிக்கும் செயற்கையான கதையோட்டம் கொண்ட நாவல் இது. ஆனால் கிறிஸ்தவம் கம்யூனிசம் இரண்டையும் இணைக்கமுயலும் ஐசக் அருமைராசன் பின்னாளில் உருவான விடுதலை இறையியலுக்கான ஒரு பாதையை உருவாக்குகிறார். அவர் தன் கொள்கைக்கு கிறிஸ்தவக் கம்யூனிசம் என்னும் சொல்லை தொடர்ந்து பயன்படுத்தினார். இந்நாவல் கிறிஸ்தவக் கம்யூனிசம் அல்லது விடுதலை இறையியல் பற்றிய முதல்நாவல் என்னும் வகையில் ஆய்வுக்குரியது.

உசாத்துணை