under review

எம். கணேசன்

From Tamil Wiki
Revision as of 01:03, 4 December 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எம். கணேசன்

எம். கணேசன் (பிறப்பு: 1965) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார்.

வாழ்க்கைக் குறிப்பு

எம். கணேசன் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் அடுக்குப்பாறையில் 1965-ல் பிறந்தார். தந்தை முத்துச்சாமியும் கூத்துக் கலைஞர். கூத்து இல்லாத காலங்களில் துணி வியாபாரம் செய்தார்.

கலை வாழ்க்கை

எம். கணேசன் பதினேழு வயது முதல் கூத்து ஆடினார். கலைவாணி நாடக சபா, ஆட்டையம்பட்டி கலைமகள் நாடக சபா, அம்மாபேட்டை சரசுவதி நாடக சபா ஆகிய சபாக்களில் கூத்து ஆடினார்.

எம். கணேசன் தன் குலதெய்வமான மதுரைவீரன் கதையை அவரின் ஊர்த்திருவிழாவில் ஆடுவார். பிற கூத்துகளில் பெரும்பாலும் பெண் வேடம் போடுவார். சில சமயங்களில் மிருதங்கம் வாசிப்பார். தமிழ்நாட்டின் சேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், அரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஆடியுள்ளார். டெல்லியில் இரண்டு மாதங்கள் தொடர்ந்து கூத்து ஆடியுள்ளார். கர்நாடகத்தில் மைசூர், இராமாபுரம், ஜெஜெல்நந்தா ஆகிய இடங்களிலும் கூத்து நிகழ்த்தியுள்ளார்.

பங்கேற்ற கூத்துகள்

  • மதுரைவீரன்
  • அர்ச்சுனன் தபசு
  • பவளக்கொடி
  • சித்திரவள்ளி
  • மாற்றான் தாய் கொடுமை
  • அபிமன்னன் சுந்தரி கல்யாணம்
  • கர்ணன் சண்டை
  • பதினெட்டாம் நாள் சண்டை
  • மாடுபிடி சண்டை
  • அபிமன்னன் கொன்ற மாலை
  • கீச்சக சம்மாரம்
  • பத்மாசூர நாடகம்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2024, 19:36:47 IST