அறத்தொடு நிற்றல்

From Tamil Wiki
Revision as of 12:54, 8 June 2022 by Jeyamohan (talk | contribs)

அறத்தொடு நிற்றல்: சங்கப்பாடல்களில் பேசப்படும் துறைகளில் ஒன்று. தலைவியோ தலைவனோ களவுறவுக்கு முற்படுகையில் தலைவன் அல்லது தலைவியோ, தோழியோ,செவிலியன்னையோ, பாங்கனோ அவர்களுக்கு முறையான கற்பொழுக்கத்தை எடுத்துரைத்து மணம்புரிவதற்கு அறிவுரை சொல்லுதல் அறத்தோடு நிற்றல். பலதருணங்களில் கவிதையின் கூறுமுறையில் அந்த அறிவுறுத்தல் உள்ளுறையென மறைந்திருக்கும்.