under review

கதிர்காமையர்

From Tamil Wiki
Revision as of 11:32, 16 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்)

கதிர்காமையர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

கதிர்காமையர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புன்னுலைக் கட்டுவன் என்னும் ஊரில் சங்கர ஐயருக்கு மகனாகப் பிறந்தார். கதிர்காமையர் மகாவித்துவான் கணேசையரின் பெரிய தந்தை. தந்தையார் இவருக்கு ஏடுதொடக்கி, தமிழும் சமஸ்கிருதமும் கற்பித்தார். ஊரெழுமயில்வாகனப் புலவரிடம் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றார். இணுவில் நடராசையரிடம் சைவசிந்தாந்த நூல்களைப் பயின்றார்.

ஆசிரியப்பணி

புன்னுலைக் கட்டுவனில் கதிர்காமையர் தமிழ்ப் பாடசாலை நிறுவி நடத்தினார். அரசினர் நன்கொடை பெறச் செய்தார். இப்போது அப்பாடசாலையை இலங்கை அரசு நடத்துகிறது.

மாணவர்கள்
  • ஊரெழு சரவணமுத்துப்புலவர்
  • காசிவாசி செந்திநாதையர்
  • மகாவித்துவான் கணேசையர்

இலக்கிய வாழ்க்கை

கதிர்காமையர் தனிப்பாடல்கள், நூல்கள் எழுதினார். அவற்றைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Dec-2022, 17:41:50 IST