இளையபெருமாள்பிள்ளை
From Tamil Wiki
To read the article in English: Ilaiyaperumal Pillai.
சொ. இளைய பெருமாள் பிள்ளை (19-ம் நூற்றாண்டு) இளையபெருமாள் பிள்ளை.திருநெல்வேலி மாவட்டம் விட்டலாபுரத்தின் தலபுராணம் எழுதியவர்.
பிறப்பு, கல்வி
இளைய பெருமாள் பிள்ளை திருநெல்வேலி மாவட்டம் குறிச்சி என்ற ஊரில் பிறந்தார். தந்தை சொக்கலிங்கம் பிள்ளை. கல்வி கற்பித்தவர் அஷ்டாவதானம் சாந்தப்ப கவிராயர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விட்டலாபுரம் என்ற ஊரின் தலபுராணம் எழுதியவர். விட்டலாபுரம் தலபுராணம் 14 சருக்கங்களில் 394 பாடல்கள் கொண்டது. விட்டலாபுரம் தலபுராணம் 1898-ம் ஆண்டு பாண்டியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
நூல்கள்
- விட்டலாபுரம் தலபுராணம்
பதிகம்
- சுப்பிரமணியர் பதிகம்
- முத்தரச குலநாதன் பதிகம்
- முத்துமாலையம்மன் பதிகம்
- விநாயகர் பதிகம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:07:29 IST